வானியற்பியல் துறையில் சிறந்த நிபுணரான டாக்டர் ஜெயந்த் நர்லிக்கரின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“டாக்டர் ஜெயந்த் நர்லிக்கரின் மறைவு அறிவியல் சமூகத்திற்கு பேரிழப்பாகும். அவர் குறிப்பாக வானியற்பியல் துறையில் ஒரு பேரறிஞர். அவரது முன்னோடி படைப்புகள், குறிப்பாக முக்கிய தத்துவார்த்த கட்டமைப்புகள், தலைமுறை ஆராய்ச்சியாளர்களால் மதிக்கப்படும். இளம் மனங்களுக்கான கற்றல் மற்றும் புதுமை மையங்களை வளர்ப்பதன் மூலம், ஒரு நிறுவனத்தை உருவாக்குபவராக அவர் முத்திரை பதித்தார். அறிவியலை சாதாரண குடிமக்களுக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் அவரது எழுத்துகள் பெரும் பங்காற்றியுள்ளன. இந்தத் துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.”
The passing of Dr. Jayant Narlikar is a monumental loss to the scientific community. He was a luminary, especially in the field of astrophysics. His pioneering works, especially key theoretical frameworks will be valued by generations of researchers. He made a mark as an…
— Narendra Modi (@narendramodi) May 20, 2025


