பிரபல தடகள வீரர் திரு மில்கா சிங் அவர்களின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பூர்த்தி செய்து எண்ணிலடங்காத இந்தியர்களின் மனதில் சிறப்பான இடம் பிடித்த மாபெரும் விளையாட்டு வீரர் என்று அவரை திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

“திரு மில்கா சிங் அவர்களின் மறைவினால், நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பூர்த்தி செய்து எண்ணிலடங்காத இந்தியர்களின் மனதில் சிறப்பான இடம் பிடித்த மாபெரும் விளையாட்டு வீரரை நாம் இழந்துள்ளோம்.  அனைவருக்கும்  ஊக்கமளிக்கும் அவரது ஆளுமை, லட்சக் கணக்கானவர்கள் அவர்மீது அன்பு செலுத்தக் காரணியாக இருந்தது. அவரது மறைவினால் மிகுந்த துயரமடைந்தேன்.

சில நாட்களுக்கு முன்புதான் திரு மில்கா சிங் அவர்களுடன் நான் பேசினேன். அதுதான் எங்களது இறுதி கலந்துரையாடல் என்பதை நான் அப்போது அறியவில்லை. ஏராளமான வளர்ந்து வரும் தடகள வீரர்களுக்கு அவரது வாழ்க்கைப் பயணம்  ஆற்றலைத் தரும். அன்னாரது குடும்பத்தினர் மற்றும் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களுக்கு எனது இரங்கல்கள்.”

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Parliament passes Jan Vishwas Bill 2026, decriminalising 717 offences, fines up to Rs 1 crore

Media Coverage

Parliament passes Jan Vishwas Bill 2026, decriminalising 717 offences, fines up to Rs 1 crore
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 3, 2026
April 03, 2026

India’s Sweet, Fast & High-Tech Revolution: FY26 Milestones That Signal Viksit Bharat Has Arrived