கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் திரு. மோடி வேண்டியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரண உதவி வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து மிகுந்த வேதனையடைந்தேன். தங்களின் அன்பமானவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.
Deeply saddened by the loss of lives due to a mishap in the Chitradurga district of Karnataka. Condolences to those who have lost their loved ones. May those injured recover at the earliest.
— PMO India (@PMOIndia) December 25, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each…
ಕರ್ನಾಟಕದ ಚಿತ್ರದುರ್ಗ ಜಿಲ್ಲೆಯಲ್ಲಿ ಸಂಭವಿಸಿದ ಅಪಘಾತದಲ್ಲಿ ಜೀವಹಾನಿಯಾಗಿದೆ ಎಂದು ತಿಳಿದು ತೀವ್ರ ದುಃಖವಾಗಿದೆ. ತಮ್ಮ ಪ್ರೀತಿಪಾತ್ರರನ್ನು ಕಳೆದುಕೊಂಡವರಿಗೆ ಸಂತಾಪ ಸೂಚಿಸುತ್ತೇನೆ. ಗಾಯಗೊಂಡವರು ಆದಷ್ಟು ಬೇಗ ಚೇತರಿಸಿಕೊಳ್ಳಲಿ.
— PMO India (@PMOIndia) December 25, 2025
ಮೃತರ ಸಂಬಂಧಿಕರಿಗೆ ಪ್ರಧಾನ ಮಂತ್ರಿಯವರ ರಾಷ್ಟ್ರೀಯ ಪರಿಹಾರ ನಿಧಿ (ಪಿಎಂಎನ್ಆರ್ಎಫ್)ಯಿಂದ 2 ಲಕ್ಷ…


