கர்நாடகாவின் ஹாசனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
"கர்நாடகாவின் ஹாசனில் ஏற்பட்ட விபத்து மனதுக்கு வருத்தம் அளிக்கிறது. இந்தத் துயரமான தருணத்தில் எனது எண்ணங்கள் யாவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நான் நம்புகிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”
The mishap in Hassan, Karnataka, is heart-rending. In this tragic hour, my thoughts are with the bereaved families. I hope those who have been injured recover at the earliest.
— PMO India (@PMOIndia) September 13, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured…


