பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை அறிவிப்பு

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்ஷியா மலைகளில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000மும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“மேகாலயாவின் கிழக்கு ஜெயின்ஷியா மலைகளில் ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு, எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையாகத் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's offshore tech hubs hit $98.4 bn revenue in FY26, says report

Media Coverage

India's offshore tech hubs hit $98.4 bn revenue in FY26, says report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 6, 2026
May 06, 2026

New India, New Pride: When Self-Reliance Meets Results — A Tribute to PM Modi