மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் படகு கவிழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தத் துயரமான விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் திரு நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இந்தத் துயரமான விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
The loss of lives due to the capsizing of a boat in Jabalpur, Madhya Pradesh, is extremely painful. I extend my condolences to those who have lost their loved ones in this tragic mishap. Praying for the speedy recovery of the injured. The local administration is assisting those…
— PMO India (@PMOIndia) May 1, 2026


