கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். “கென்யாவின் முன்னாள் பிரதமரும் எனது நெருங்கிய நண்பருமான ரெய்லா ஒடிங்காவின் மறைவு மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. இந்தியா – கென்யா இடையேயான நட்புறவுக்கு காரணமாக அவர் திகழ்ந்தார். குஜராத் முதலமைச்சராக பொறுப்பு வகித்த நாட்களில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்புக் கிடைத்தது. எங்களது இந்த நட்பு பல ஆண்டுகளுக்கு தொடர்ந்தது” என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இந்தியா மீது சிறப்பான அன்பை அவர் கொண்டிருந்தார் என்றும் நமது நாட்டின் கலாச்சார மாண்புகள், தொன்மையான ஞானம் ஆகியவற்றின் மீது ஈர்ப்புக் கொண்டவர் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான அவர் மேற்கொண்ட முயற்சிகளில் இது பிரதிபலித்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“கென்யாவின் முன்னாள் பிரதமரும் எனது நெருங்கிய நண்பருமான ரெய்லா ஒடிங்காவின் மறைவு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - கென்யா இடையே நட்புறவிற்கு காரணியாக அவர் திகழ்ந்தார்.   குஜராத் மாநில முதலமைச்சராக பொறுப்பு வகித்த நாட்களில்  அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியா மீது நன்மதிப்பு கொண்டிருந்ததுடன் நமது நாட்டின் கலாச்சார மாண்புகள் மற்றும் தொன்மையான ஞானம் ஆகியவற்றின் மீது ஈர்ப்புக் கொண்டிருந்தார். இது இவ்விரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் முயற்சிகளில்  பிரதிபலித்துள்ளது. அவர் இந்தியாவின் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவமுறைகள் மீது பெரும் ஈர்ப்பைக் கொண்டிருந்ததுடன் அவரது மகளின் உடல் ஆரோக்கியத்திற்கு இந்த மருத்துவமுறை ஏற்படுத்திய தாக்கத்தையும் உணர்ந்திருந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கென்ய மக்களுக்கும் இந்தத் தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Vikas Bhi, Virasat Bhi: How JATAN, AI and Digital Archives are revolutionising India’s cultural heritage preservation

Media Coverage

Vikas Bhi, Virasat Bhi: How JATAN, AI and Digital Archives are revolutionising India’s cultural heritage preservation
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் துணிச்சல் மிக்க தியாகிகளுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
August 09, 2026

 பிரதமர் திரு நரேந்திர மோடி, வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற தியாகிகள் அனைவரையும் நினைவுகூர்ந்து, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் துணிச்சலுக்கும் உறுதிக்கும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மகாத்மா காந்தியின் தலைமையால் உத்வேகம் பெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் அறைகூவல், சுதந்திரப் போராட்டத்திற்குப் புதிய ஆற்றலை ஊட்டியதுடன், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான இந்திய மக்களின் அசைக்க முடியாத உறுதியையும் பிரதிபலித்தது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற தியாகிகள் அனைவரையும் நினைவுகூர்கிறோம். அவர்களின் துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றென்றும் உத்வேகமாக விளங்கும். மகாத்மா காந்தியின் தலைமையால் உத்வேகம் பெற்ற வெள்ளையனே வெளியேறு முழக்கம், நமது சுதந்திரப் போராட்டத்திற்குப் புதிய ஆற்றலை ஊட்டியதுடன், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான நமது மக்களின் அசைக்க முடியாத உறுதியையும் பிரதிபலித்தது."