மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் திரு அஜித் பவார் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மக்களுக்கு சேவையாற்றுவதில் முன்னிலை வகித்தவராகவும், கடின உழைப்பால் பெரிதும் மதிக்கப்பட்டவராகவும் திரு அஜித் பவார் திகழ்ந்தார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். நிர்வாக விவகாரங்களில் அவரது புரிந்துணர்வும் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு அதிகாரமளிப்பதில் அவரது ஆர்வமும்  குறிப்பிடத்தக்கவை என்று கூறியுள்ளார்.  அவரது எதிர்பாராத மறைவு மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அன்னாரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற அவரது ஆதரவாளர்களுக்கும் தமது இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக திரு மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“திரு அஜித் பவார் மக்கள் தலைவராகவும் அடித்தள மக்களுடன் வலிமையான தொடர்பை கொண்டிருந்தவராகவும் திகழ்ந்தார். மகாராஷ்டிரா மக்களுக்கு சேவையாற்றுவதில் முன்னிலை வகித்தவராகவும், கடின உழைப்பால் பெரிதும் மதிக்கப்பட்டார். நிர்வாக விவகாரங்களில் அவரது புரிந்துணர்வும் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு அதிகாரமளிப்பதில் அவரது ஆர்வமும்  குறிப்பிடத்தக்கவை. அவரது எதிர்பாராத மறைவு மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற அவரது ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி”.

 

"श्री अजित पवार जी हे जनतेशी घट्ट नाते असलेले, तळागाळाशी मजबूत नाळ असलेले लोकनेते होते. महाराष्ट्रातील जनतेच्या सेवेत सदैव अग्रभागी राहणारे एक मेहनती व्यक्तिमत्त्व म्हणून त्यांना व्यापक आदर होता. प्रशासकीय बाबींची त्यांना सखोल जाण होती. गरीब आणि वंचितांच्या सक्षमीकरणासाठीची त्यांची तळमळ विशेष उल्लेखनीय होती. त्यांचे अकाली निधन अत्यंत धक्कादायक व दुःखद आहे. त्यांच्या कुटुंबीयांप्रती आणि असंख्य चाहत्यांप्रती मनःपूर्वक शोकसंवेदना. ॐ शांती."

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
‘Modi Govt’s 12 years are transformational for industry’

Media Coverage

‘Modi Govt’s 12 years are transformational for industry’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 12, 2026
June 12, 2026

Breaking Barriers, Building Bharat: PM Modi’s Historic Push for Gender Equality and Inclusive Growth