டோடாவில் நிகழ்ந்த துயர விபத்தில் துணிச்சலான ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
டோடாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் துணிச்சலான ராணுவ வீரர்களை இழந்ததை அறிந்து தாம் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாகப் பிரதமர் கூறினார். அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவை என்றென்றும் நினைவுகூரப்படும்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த திரு மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“டோடாவில் நிகழ்ந்த விபத்தில் துணிச்சலான ராணுவ வீரர்களை நாம் இழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சேவை என்றென்றும் நினைவுகூரப்படும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.”
Deeply anguished by the mishap in Doda, in which we have lost our brave army personnel. Their service to the nation will be remembered forever. May the injured recover at the earliest. All possible support is being provided to those affected.
— Narendra Modi (@narendramodi) January 22, 2026


