உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிடுள்ள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
"உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது: பிரதமர் @narendramodi"
Deeply saddened by the loss of lives due to a stampede on the route to Mansa Devi Temple in Haridwar, Uttarakhand. Condolences to those who lost their loved ones. May the injured recover soon. The local administration is assisting those affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 27, 2025


