அனைத்து உதவிகளையும் செய்வதாக கேரள முதலமைச்சரிடம் பிரதமர் உறுதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு அறிவிப்பு

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயனுடன் தொடர்பு கொண்டு பேசிய அவர், அங்கு நிலவும் சூழ்நிலையை எதிர்கொள்ள மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார்.

 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

 

சமூக ஊடக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

 

"வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவ தற்போது மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. கேரள முதலமைச்சர் திரு @pinarayivijayan உடன் பேசினேன். மேலும் அங்கு நிலவும் சூழ்நிலையை அடுத்து மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தேன்”.

 

 

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது;

 

"வயநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ .2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்”.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
‘Modi Govt’s 12 years are transformational for industry’

Media Coverage

‘Modi Govt’s 12 years are transformational for industry’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 12, 2026
June 12, 2026

Breaking Barriers, Building Bharat: PM Modi’s Historic Push for Gender Equality and Inclusive Growth