PM announces ex-gratia from PMNRF

உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.

உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் வழங்கப்படும் என திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நிகழ்ந்த விபத்து குறித்து அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்”

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
‘Give mothers, sisters their due rights’: PM Modi pushes for women's reservation from the ramparts of Red Fort

Media Coverage

‘Give mothers, sisters their due rights’: PM Modi pushes for women's reservation from the ramparts of Red Fort
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 16, 2026
August 16, 2026

Aatmanirbhar Ambitions Meet Global Alliances: The Modi Doctrine in Action