உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு:

"உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் நடந்த சாலை விபத்து வேதனை அளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு  அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது: பிரதமர்"

 

இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். இதன்படி, நிவாரண உதவித் தொகையாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (பிஎம்என்ஆர்எஃப்) வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு:

"உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர்"

என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's Economic Journey: From Licence Raj To Pragmatic Governance

Media Coverage

India's Economic Journey: From Licence Raj To Pragmatic Governance
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 27, 2026
August 27, 2026

Make in India Goes Global: Engineering Boom, Rice Triumph & EU FTA Breakthrough Under PM Modi