குடியரசுத்தலைவர் மாளிகையின் அசோக மண்டபம் அருகே உள்ள பிரம்மாண்டமான படிக்கட்டின் அருகில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின் திருவுருவப்படத்தை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு திறந்து வைத்தார்.
தேசத்தின் விதியை வடிவமைத்தவர்களை கௌரவிப்பதிலும், காலனித்துவ மனநிலையின் மீதங்களை அகற்றுவதிலும் இந்தியாவின் உறுதியை பிரதிபலிப்பதாக இந்த முன்முயற்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். தலைசிறந்த அறிஞராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும், சிந்தனையாளராகவும், நிர்வாகியாகவும் ராஜாஜி திகழ்ந்தார் என்று குறிப்பிட்ட பிரதமர், அவரது வாழ்க்கை நேர்மை, அறிவுத்திறன் மற்றும் நாட்டின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது என்று கூறினார்.
குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற ‘ராஜாஜி பெருவிழா’ நிகழ்ச்சியிலும் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். பெருவிழாவின் ஒரு பகுதியாக, ராஜாஜியின் வாழ்க்கை மற்றும் பணிகளை விளக்கும் கண்காட்சி, குடியரசுத்தலைவர் மாளிகையில் 2026 பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை நடைபெற உள்ளது.
தேசத்திற்கு ராஜாஜி வழங்கிய வளமான பங்களிப்புகளின் வெவ்வேறு அம்சங்களை எடுத்துரைக்கும் அற்புதமான முன்முயற்சி என்று ராஜாஜி பெருவிழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி விவரித்தார். அன்னாரது வாழ்க்கை மற்றும் கொள்கைகளில் இருந்து எழுச்சி பெற வேண்டும் என்றும், அதற்கு இந்தக் கண்காட்சியைப் பொதுமக்கள் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த முன்முயற்சிகள் குறித்து குடியரசுத்தலைவர், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவுகளுக்குப் பதிலளித்து திரு மோடி பதிவிட்டதாவது:
“தேசத்தின் விதியை வடிவமைப்பவர்களை கௌரவிப்பதிலும் காலனித்துவ மனநிலையின் மீதங்களை அகற்றுவதிலும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு அற்புதமான முயற்சி.
தலைசிறந்த அறிஞராகவும், சுதந்திர போராட்ட வீரராகவும், சிந்தனையாளராகவும் நிர்வாகியாகவும் ராஜாஜி திகழ்ந்தார். அவரது வாழ்க்கை நேர்மை, அறிவுத்திறன் மற்றும் தேசத்தின் மீதான அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.”
“அற்புதமான முன்முயற்சியான ராஜாஜி பெருவிழா, தேசத்திற்கான ராஜாஜியின் வளமான பங்களிப்புகளின் வெவ்வேறு அம்சங்களை வெளிக்கொணர்கிறது. இதனைப் பார்வையிட்டு, உத்வேகம் பெறுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்!”
A commendable effort, which reflects India’s resolve to honour those who shaped our destiny and to shed remnants of a colonial mindset.
— Narendra Modi (@narendramodi) February 23, 2026
Rajaji was a towering scholar, freedom fighter, thinker and administrator. His life embodied integrity, intellect and unwavering commitment to… https://t.co/cfuOtahHfI
“Rajaji Utsav is a wonderful initiative, which brings out different aspects of Rajaji's rich contribution to our nation. I urge you all to visit it and get inspired!”
Rajaji Utsav is a wonderful initiative, which brings out different aspects of Rajaji's rich contribution to our nation. I urge you all to visit it and get inspired! https://t.co/ubwrwcb3Dt
— Narendra Modi (@narendramodi) February 23, 2026


