PM Modi chairs PRAGATI meet, projects pertaining to Railways, MORTH, Power reviewed
PM Modi reviews the Pradhan Mantri Bhartiya Jan Aushadhi Pariyojana during PRAGATI meet
Up to the 34th edition of PRAGATI meetings, 283 projects having a total cost of 13.14 lakh crore have been reviewed

மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்பான செயல்திறன் மிக்க ஆளுகை மற்றும் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துதல் தொடர்பான தகவல் மற்றும் தகவல் தொடர்பு பல்முனை தளமான பிரகதியின்

முப்பத்து ஐந்தாவது உரையாடலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார்.

ஒன்பது திட்டங்கள் மற்றும் ஒரு செயல்பாடு உட்பட பத்து விஷயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் மூன்று திட்டங்கள் ரயில்வே அமைச்சகம் தொடர்பானதும், மூன்று திட்டங்கள் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தொடர்பானதும் ஆகும். தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை, எரிசக்தி அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை தொடர்பான தலா ஒரு திட்டமும் ஆய்வு செய்யப்பட்டன. சுமார் ரூ 54,675 கோடி மதிப்பிலான இந்த திட்டங்கள், ஒடிசா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், பஞ்சாப், ஜார்கண்ட், பிகார், தெலங்கானா, ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 15 மாநிலங்கள் தொடர்பானவை ஆகும்.

பிரதமரின் மக்கள் மருந்தக திட்டம் குறித்தும் இன்றைய உரையாடலின் போது ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

உள்கட்டமைப்பு திட்டங்கள் சார்ந்த பிரச்சினைகளை விரைவாக தீர்க்குமாறு அனைத்து அதிகாரிகளையும் பிரதமர் கேட்டுக் கொண்டார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதமரின் மக்கள் மருந்தக திட்டம் குறித்து விரிவான விளம்பரம் செய்யுமாறும், அதன் செயல்திறனை மேம்படுத்துமாறும் மருந்துகள் துறை மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

முந்தைய 34 பிரகதி உரையாடல்களில், ரூ 13.14 லட்சம் கோடி மதிப்பிலான 283 திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Why The SHANTI Bill Makes Modi Government’s Nuclear Energy Push Truly Futuristic

Media Coverage

Why The SHANTI Bill Makes Modi Government’s Nuclear Energy Push Truly Futuristic
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Gujarat meets Prime Minister
December 19, 2025

The Chief Minister of Gujarat, Shri Bhupendra Patel met Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

The Prime Minister’s Office posted on X;

“Chief Minister of Gujarat, Shri @Bhupendrapbjp met Prime Minister @narendramodi.

@CMOGuj”