சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தங்களது அர்ப்பணிப்பை வலுப்படுத்துமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், சுற்றுச்சூழலை பசுமையாகவும், சிறப்பாகவும் கட்டியெழுப்ப அடித்தள நிலையிலிருந்து பாடுபடுபவர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகளை அவர் பாராட்டியுள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமது எண்ணங்களை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு பிரதமர் கூறியிருப்பதாவது:
"இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில், நமது பூமியை பாதுகாப்பதற்கும், நாம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்கும் நமது முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவோம். நமது சுற்றுச்சூழலை பசுமையாகவும் சிறப்பாகவும் மாற்ற அடித்தள நிலையிலிருந்து பாடுபடும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்."
This #WorldEnvironmentDay, let’s deepen our efforts towards protecting our planet and overcoming the challenges we face. I also compliment all those working at the grassroots to make our environment greener and better. pic.twitter.com/E7mWAFZ73V
— Narendra Modi (@narendramodi) June 5, 2025


