"காசியில் நடைபெறும் கங்கை புஷ்கரலு உற்சவம் கங்கை மற்றும் கோதாவரி சங்கமிப்பதைப் போன்றது"
"தெலுங்கு பேசும் மாநிலங்கள் காசிக்கு எத்தனையோ மகான்கள், வழிகாட்டிகள் மற்றும் ஞானிகளை வழங்கியுள்ளன"
"தெலுங்கு மக்களை காசி ஏற்று, புரிந்து கொண்டதைப் போலவே காசியை அந்த மக்கள் தங்கள் ஆன்மாவுடன் இணைத்துக் கொண்டார்கள்"
"கங்கையில் நீராடுவது உங்கள் ஆன்மாவை மகிழ்விக்கும்"
"நமது முன்னோர்கள் இந்தியாவின் உணர்வுகளை வெவ்வேறு மையங்களில் நிலைநிறுத்தியுள்ளனர். இது ஒன்றிணைந்து இந்தியத் தாயின் முழு வடிவத்தை உருவாக்குகிறது"
"முழுமையான இந்தியாவையும் அதன் முழுத் திறன்களையும் நாட்டின் மொத்த பன்முகத் தன்மையுடன் காணும்போது மட்டுமே உணர முடியும்"

உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் நடைபெற்ற காசி தெலுங்கு சங்கமத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

 

கங்கை புஷ்கரலு உற்சவ விழாவை முன்னிட்டு தமது வாழ்த்துகளைத் தெரிவித்து உரையைத் தொடங்கிய பிரதமர், இங்கு வந்துள்ள அனைவரும் தனது தனிப்பட்ட விருந்தினர் என்றும், விருந்தினர்கள் இந்திய கலாச்சாரத்தில் கடவுளுக்கு நிகரான அந்தஸ்தைக் கொண்டுள்ளதாகவும்  கூறினார். அவர்களை வரவேற்க அங்கு செல்ல முடியாவிட்டாலும் தமது மனம் அவர்கள் அனைவருடனும் உள்ளது என்று பிரதமர் கூறினார். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காசி-தெலுங்கு கமிட்டி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜி.வி.எல்.நரசிம்மராவ் ஆகியோருக்கு அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். காசியின் நதிக்கரைகளில் நடைபெறும் கங்கை - புஷ்கரலு உற்சவம் கங்கை மற்றும் கோதாவரி சங்கமிப்பது போன்றது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இது இந்தியாவின் பழங்கால நாகரிகங்கள், கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களின் சங்கமத்தின் கொண்டாட்டம் என்று கூறினார். சில மாதங்களுக்கு முன்பு இங்கு நடந்த காசி - தமிழ் சங்கமம் பற்றியும் அவர்  நினைவு கூர்ந்தார். மேலும், சில நாட்களுக்கு முன்பு சௌராஷ்டிரா - தமிழ் சங்கமத்தில் தாம் பங்கேற்றதையும் அவர் குறிப்பிட்டார். இது விடுதலையின் அமிர்த காலத்தில்  இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரங்களின் சங்கமத்தைக் குறிப்பதாக அவர் கூறினார். இந்த பன்முகத்தன்மைகளின் சங்கமம் தேசியத்தின் ஒற்றுமையை உருவாக்குகிறது என்றும் இது எதிர்காலத்தில் இந்தியாவிற்கு முழு ஆற்றலை உறுதி செய்யும் என்றும் பிரதமர் கூறினார்.

 

காசிக்கும் அங்கு வசிப்பவர்களும் தெலுங்கு பேசும் மக்களுடன் ஆழமான தொடர்புகளைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். காசி அவர்களை பல தலைமுறைகளாக வரவேற்று வருவதாகவும், அந்த உறவு காசி நகரத்தைப் போலவே பழமையானது என்றும் அவர் கூறினார். காசியில் தெலுங்கு பேசும் பின்னணியில் உள்ளவர்களின் நம்பிக்கை காசியைப் போலவே புனிதமானது என்றும் அவர் குறிப்பிட்டார். காசிக்கு வரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கையில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் கணிசமாக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். தெலுங்கு பேசும் மாநிலங்கள் காசிக்கு எத்தனையோ மகான்கள், எத்தனையோ வழிகாட்டிகள் மற்றும் முனிவர்களைக் கொடுத்துள்ளன என்று பிரதமர் தெரிவித்தார். காசி மக்களும், யாத்ரீகர்களும் பாபா விஸ்வநாதரை தரிசிக்கச் செல்லும்போது, தைலாங்க் சுவாமியின் ஆசிரமத்திற்கும் சென்று ஆசிர்வாதம் பெறுவதை அவர் சுட்டிக்காட்டினார். தைலாங்க் சுவாமி விஜயநகரத்தில் பிறந்தவர் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஆனால், அவர் சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரால் காசியில் வாழும் சிவன் என்று அழைக்கப்பட்டதை பிரதமர் குறிப்பிட்டார். இன்றும் காசியில் ஜித்து கிருஷ்ணமூர்த்தி போன்ற பெரிய மகான்கள் அன்புடன் நினைவுகூரப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

தெலுங்கு மக்களை காசி ஏற்று, புரிந்து கொண்டதைப் போலவே காசியை அந்த மக்கள் தங்கள் ஆன்மாவுடன் இணைத்துக் கொண்டுள்ளதாக பிரதமர் கூறினார். தட்சிண காசி எனப்படும் புனித தலமாக வெமுலவாடா விளங்குவதையும் பிரதமர் குறிப்பிட்டார். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள கோவில்களில்,  கைகளில் கட்டப்படும் கருப்பு நூல், காசிக் கயிறு என்று அழைக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். காசியின் மகிமை தெலுங்கு மொழியிலும் இலக்கியத்திலும் ஆழமாகக் கூறப்பட்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார். ஸ்ரீநாத் மகாகவியின் காசி கந்தமு கிரந்தத்தையும், எங்கூல் வீரஸ்வமய்யாவின் காசி யாத்திரையையும், பிரபலமான காசி மஜிலி கதாலுவையும் பிரதமர் குறிப்பிட்டார். நீண்ட தூரத்தில் உள்ள ஒரு நகரம் இதயத்திற்கு மிக நெருக்கமாக உள்ளது என்பதை வெளிநாட்டவர் நம்புவது கடினமாக இருக்கும் என்று பிரதமர் கூறினார். ஆனால், பல நூற்றாண்டுகளாக ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், அதை உயிர்ப்போடு வைத்திருக்கும் இந்தியாவின் பாரம்பரியம் இதுதான் எனவும் பிரதமர் தெரிவித்தார்.  

 

காசி என்பது விடுதலை மற்றும் முக்தியின் பூமி என்று பிரதமர் குறிப்பிட்டார். தெலுங்கு மக்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து காசி சென்றதை நினைவுகூர்ந்த பிரதமர், நவீன காலத்தில் சூழ்நிலைகள் வேகமாக மாறிவருகின்றன என்றார். ஒருபுறம் விஸ்வநாத ஆலயத்தின் தெய்வீக மகிமையையும் மறுபுறம் கங்கைப் பகுதியின்  மகத்துவத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். காசியின் தெருக்கள் ஒருபுறமும், புதிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பு மறுபுறமும் விரிவடைந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். முந்தைய காலங்களில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து காசிக்கு வந்தவர்கள் நகரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்ந்திருப்பார்கள் என்று பிரதமா் கூறினார். புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் விமான நிலையத்திலிருந்து தசாஷ்வமேத் காட் பகுதியை அடையும் நேரம் குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். நகரின் வளர்ச்சி தொடா்பாக பல்வேறு உதாரணங்களையும் பிரதமா் குறிப்பிட்டார். பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடியில் மின் கம்பிகள் பதிக்கப்பட்டிருப்பது, நீா்நிலைகள், கோயிலுக்கான வழிகள் மற்றும் நகரத்தின் கலாச்சார மையங்களுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளதையும், கங்கையில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் படகுகளின் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதையும் அவா் குறிப்பிட்டார். காசி நகர மக்கள் பயன்பெறும் வகையில் கம்பி வட ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட இருப்பதையும் அவா் சுட்டிக்காட்டினார். தூய்மை இயக்கங்கள் மற்றும் நதிக்கரை தூய்மைக்காக நகரவாசிகள் மற்றும் இளைஞர்களைக் கொண்டு மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டு இருப்பதற்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.

 

விருந்தினரை வரவேற்பதற்கும், அவா்களுக்கு சேவை செய்வதற்கும் காசி மக்கள் அனைத்து பணிகளையும் செய்வார்கள் என்று பிரதமர் தெரிவித்தார். பாபாவின் ஆசீர்வாதம், கால பைரவர் மற்றும் அன்னபூரணியின் தரிசனம் அற்புதமானது என அவா் குறிப்பிட்டார். புனித கங்கையில் நீராடுவது உங்கள் ஆன்மாவை மகிழ்விக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், லஸ்ஸி, தண்டை, சாட், லிட்டி-சோக்கா மற்றும் பனாரசி பான் போன்ற சுவையான உணவுகள் பயணத்தை இன்னும் மறக்க முடியாததாக மாற்றும் என்றும் கூறினார். ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த தோழர்கள் விரும்பி வாங்கக் கூடிய எட்டிகொப்பகா பொம்மைகளைப் போலவே வாரணாசியின் மர பொம்மைகள் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். பனாரஸ் பட்டுப் புடவைகளையும் ஆந்திரா மற்றும் தெலங்கான மக்கள் அதிகம் விரும்புவதாக அவா் கூறினார்.

 

நமது முன்னோர்கள் இந்தியாவின் உணா்வுகளை வெவ்வேறு மையங்களில் நிலைநிறுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இது இணைந்து இந்திய அன்னையின் முழு வடிவத்தையும் உருவாக்குகிறது என்று அவர் கூறினார். காசியில் உள்ள பாபா விஸ்வநாதர் மற்றும் விசாலாக்ஷி சக்திபீடம், ஆந்திராவில் மல்லிகார்ஜுனர் ஆலயம், தெலங்கானாவில் பகவான் ராஜ ராஜேஷ்வர் ஆலயம், ஆந்திராவில் உள்ள மா பிரமராம்பா ஆலயம், தெலங்கானாவில் உள்ள ராஜேஸ்வரி ஆலயம் போன்ற புனிதத் தலங்கள் அனைத்தும் இந்தியாவின் முக்கிய மையங்களாகவும், கலாச்சார அடையாளங்களாகவும் உள்ளன என்று அவர் கூறினார். நாட்டின் பன்முகத்தன்மையை முழுமையாகப் பார்க்கும் போதுதான் இந்தியாவின் முழுமையையும் அதன் முழுத் திறன்களையும் உணர முடியும் என்று அவர் கூறிப்பிட்டார். அப்போதுதான் நம்முடைய முழுத் திறன்களையும் நாம் உணர்ந்து விழிப்புணர்வு பெற முடியும் என்று பிரதமர் தெரிவித்தார். கங்கை-புஷ்கரலு போன்ற விழாக்கள் தேசத்திற்கான சேவை குறித்த நமது தீர்மானங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
500 ethanol pumps by year-end: Union minister Hardeep Singh Puri

Media Coverage

500 ethanol pumps by year-end: Union minister Hardeep Singh Puri
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
UK Foreign Secretary meets Prime Minister
June 04, 2026

UK Foreign Secretary Yvette Cooper today met Prime Minister Shri Narendra Modi.

The Prime Minister expressed his pleasure upon the meeting and appreciated the deepening of the India-UK partnership in recent times which has unlocked unprecedented growth opportunities for both countries.

The Prime Minister affirmed that the India-UK Vision 2035 will continue to guide the partnership and strengthen joint efforts for the global good.

The Prime Minister posted on X:

"Pleased to meet UK Foreign Secretary Yvette Cooper. Appreciated the deepening of the India-UK partnership in recent times that has unlocked unprecedented growth opportunities for both our countries.

India-UK Vision 2035 will continue to guide our partnership and strengthen our joint efforts for global good.@YvetteCooperMP"