கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டார்ஜிலிங் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் நிலைமை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அரசு உறுதியாக இருப்பதாக திரு. மோடி மீண்டும் கூறியுள்ளார். இயற்கை பேரிடரின் தாக்கத்தை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான ஒருங்கிணைந்த முயற்சிகளை அவர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது
"கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட டார்ஜிலிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுடன் துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன்."
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது என அவர்கள் தெரிவித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Authorities are closely monitoring the situation in Darjeeling and surrounding areas affected by heavy rainfall and landslides. My thoughts are with the bereaved families. Wishing the injured a quick recovery.
— Narendra Modi (@narendramodi) October 5, 2025
"ভারী বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত দার্জিলিং এবং আশপাশের এলাকার পরিস্থিতির উপর প্রশাসন গভীরভাবে নজরদারি চালাচ্ছে। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।"
ভারী বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত দার্জিলিং এবং আশপাশের এলাকার পরিস্থিতির উপর প্রশাসন গভীরভাবে নজরদারি চালাচ্ছে। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
— Narendra Modi (@narendramodi) October 5, 2025


