நாட்டு மக்கள் தங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில், பணியாற்றுவதற்கு கட்சித் தொண்டர்கள் தங்களது இலக்குகளை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிர்ணயித்து கொள்ள இதுவே உகந்த தருணம்- பிரதமர் மோடி
ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும், சமூக பாதுகாப்பிற்காகவும் கடந்த எட்டு ஆண்டுகளாக பிஜேபி தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உழைத்து வருவதாக பிரதமர் பேச்சு
நாட்டின் வளர்ச்சி தொடர்பான விவாதங்களில் இருந்து உங்களை மடை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் நீங்கள் அவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்- பிஜேபி நிர்வாகிகளுக்கு பிரதமர் அறிவுரை

ஜெய்ப்பூரில் நடைபெற்ற பிஜேபி தேசிய நிர்வாகிகளுக்கான கூட்டத்தில் மெய்நிகர் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இன்று உரையாற்றினார். தனது உரையை துவங்கிய பிரதமர் மோடி,  பிஜேபியில் அடித்தளமிட்டவர்கள் தொடங்கி, பாதை வகுத்துத்தந்தவர்கள் வரை வெற்றியின் பயணத்தில் பங்களித்த அனைவரது  பங்களிப்புகள் குறித்தும், கட்சியை வலுப்படுத்தும் தொண்டர்கள் குறித்தும் குறிப்பிட்டு பேசினார். 

 நாட்டில் பிஜேபி வெற்றிகரமாக  கொண்டுவந்துள்ள பெரும் மாற்றங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விரிவாக எடுத்துரைத்தார். நீண்டகாலமாக ஒருவர் நோய்வாய் பட்டிருந்தால் அதற்கான சூழலையும், மீண்டும் சாதாரணமான வாழ்வை தொடர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதுமே முக்கியமாக இருக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பல பத்து ஆண்டுகளாக இந்திய நாட்டு மக்களும் இதேபோன்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்ததாக எடுத்துரைத்தார். 2014-ம் ஆண்டு பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த எண்ண ஓட்டத்தில் மாற்றம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார். இன்று இந்திய மக்கள் அனைவரும் மிகப்பெரும் அபிலாஷைகளுடன் திகழ்வதாக அவர் கூறினார்.  மக்களுக்கு இப்போது திட்டங்களால் விளையும் பலன்கள் குறித்த அக்கறை ஏற்பட்டுள்ளது என்றும், அரசுகள் கடுமையாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது என்றும் பதவியில் இருக்கும் அரசுகள் தங்களுக்கு பலன்களை வழங்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதாகவும் கூறினார்.  

கட்சி நிர்வாகிகளிடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிஜேபி 18 மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதை சுட்டிக்காட்டினார். கட்சிக்கு 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 1300க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் கூறிய பிரதமர், இது போதும் என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால் அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்றும், நமக்கு இதுபோன்ற விவகாரங்களில் மெத்தனப்போக்கு அறவே இருக்கக்கூடாது என்றும் நமது கட்சிக்கு அடித்தளமிட்ட தலைவர்கள் நமக்கு கற்றுத்தந்திருக்கிறார்கள் என்றும், மக்களின் நலனுக்காகவும், அவர்களது நன்மைக்காகவும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர்கள் நமக்கு போதித்திருக்கிறார்கள் என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.

கட்சி சமீபத்தில் பெற்றிருக்கும் வெற்றி காரணமாக கட்சி நிர்வாகிகளிடையே மெத்தனப்போக்கு ஏற்படக்கூடாது என்று வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டங்களை கட்சி வகுத்து, அதன்படி நடக்க வேண்டும் என்று கூறினார். நாம் அடுத்த 25 ஆண்டுகளுக்குரிய இலக்கை நிர்ணயித்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு இதுவே சரியான தருணம் என்றும், அதற்காக கடுமையாக உழைப்பதோடு, நாட்டு மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாக எவ்வித சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ச்சியாக உழைக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.  

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று எட்டு ஆண்டுகள் நிறைவு செய்திருப்பது பற்றி குறிப்பிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த எட்டு ஆண்டுகளையும் சேவைக்காகவும், சிறந்த நிர்வாகத்திற்காகவும், ஏழை மக்களின் நலனுக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு இந்த அரசு செயலாற்றி வருவதாகவும் கூறினார்.  சிறு விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் நலனுக்காக அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக இந்த எட்டு ஆண்டுகள் ஆட்சி நடைபெற்றிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார். முன்னர் இருந்த அரசுகள் மீதும், அரசுகளின் செயல்பாடுகள் மீதும், அரசுகள்  திட்டங்களை நிறைவேற்றிய விதம் தொடர்பாகவும் மக்களுக்கு நிலவிய நம்பிக்கையின்மை தற்போது விலகி இருப்பதாகவும், அதற்கு பிஜேபி அரசின் செயல்பாடுகளே காரணம் என்றும் பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 

 எதிர்க்கட்சிகளின் குறுகிய, சுயநல மனப்பான்மை பற்றி குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தங்களது சுயநலத்திற்காக இந்த அரசியல் கட்சிகள் சமூகத்தின் பலவீனத்தை தூண்டிவிட்டு அதில் ஆதாயமடைய முயற்சி மேற்கொள்வதாக குற்றம் சாட்டினார். சில நேரங்களில் ஜாதியின் பெயராலும், சில நேரங்களில் பிராந்தியவாதம் என்ற பெயராலும் அவர்கள் மக்களை தூண்டிவருகிறார்கள் என்றார். நாட்டை வளப்படுத்தும் நமது முயற்சிக்கு இடையூறாக இத்தகைய அரசியல் கட்சிகள் திசைத்திருப்பும் முயற்சிகளிலும், தடை ஏற்படுத்தும் விதத்திலும்  செயல்படுவார்கள் என்று அவர் கட்சியின் நிர்வாகிகளை எச்சரித்தார். தற்போது சில கட்சிகள் எவ்வாறு முக்கிய பிரச்சனைகளில் பொது மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் காண முடிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய கட்சிகளின் வஞ்சக வலையில் நாம் சிக்கிவிடக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். 

பிரதமர் வீட்டுவசதி திட்டம், ஆயுஷ்மான் பாரத், பிரதமர் விவசாயிகள் நல்வாழ்வு திட்டம், தேசிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு தேசிய திட்டங்கள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். இன்று பரம ஏழைகளும் அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைந்து வருவதை காண முடிகிறது என்று கூறிய பிரதமர், அவர்களில் பலர் பெரும் நம்பிக்கையோடு இத்தகைய நலத்திட்டங்கள் வாயிலாக தாங்கள் நிச்சயம் ஒருநாள் பயன் பெறுவோம் என்று கூறிவருகின்றனர் என்றார்.

 இதுதான் வளர்ச்சியின் அடிப்படையிலான அரசியலை நாட்டின் பிரதான அரசியல் கொள்கையாக பிஜேபி மாற்றியிருப்பதன் அடையாளம் என்றும் பிரதமர் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Second consignment of 37.5 tonnes HADR aid reaches flood-hit Nepal; India sends 47.5 tonnes of relief material in total

Media Coverage

Second consignment of 37.5 tonnes HADR aid reaches flood-hit Nepal; India sends 47.5 tonnes of relief material in total
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles the passing of His Majesty King Harald V of Norway
August 28, 2026

The Prime Minister, Shri Narendra Modi condoled the passing of His Majesty King Harald V of the Kingdom of Norway. Recalling his meeting with His Majesty during his visit to Norway earlier this year, Shri Modi remembered his warmth and profound sense of service to the people and nation of Norway.

The Prime Minister posted on X;

“Deeply saddened by the passing of His Majesty King Harald V of the Kingdom of Norway.

I fondly recall meeting His Majesty during my visit to Norway earlier this year and was deeply touched by his warmth and profound sense of service to his nation.

My heartfelt condolences to the Royal Family and the people of Norway.