“நாட்டுக்கு இது அமிர்த காலமாக இருப்பது போலவே உங்கள் வாழ்க்கையிலும் இது அமிர்த காலமாக இருக்கிறது”
“இன்று நாட்டின் சிந்தனையும், அணுகுமுறையும் உங்களைப் போலவே இருக்கிறது. முந்தைய காலம் துல்லியமான செயல்பாட்டு சிந்தனையாக இருந்திருந்தால் தற்போதைய சிந்தனை செயல்வடிவமாகவும், பயன் விளைவிப்பதாகவும் இருந்திருக்கும்”
“நாடு ஏராளமான நேரத்தை வீணாக்கியுள்ளது. இதற்கிடையில் இரண்டு தலைமுறைகள் கடந்து விட்டன. எனவே இரண்டு நிமிடங்களைக் கூட நாம் வீணாக்கக் கூடாது”
“பொறுமையற்று நான் பேசுவதாக இருந்தால் அதற்கான காரணம், அதே போல் தற்சார்பு இந்தியாவுக்கு நீங்கள் பொறுமைற்றவர்களாக மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தற்சார்பு இந்தியா என்பது எவரையும் சார்ந்திருக்காத முழுமையான சுதந்திர வடிவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்”
“சவால்களை நீங்கள் எதிர்நோக்கியிருந்தால் நீங்கள் வேட்டையாடுபவராகவும், சவால் என்பது வேட்டையாடப்படுவதாகவும் இருக்கும்”
“மகிழ்ச்சியையும், அன்பையும் பகிர்ந்துக் கொள்ள நேரம் வரும்போது கடவுச்சொல் எதையும் வைத்திருக்காதீர்கள், திறந்த மனதுடன் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்”

கான்பூர் ஐஐடியில் 54-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்ற பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிளாக்செயின் தொழில்நுட்ப அடிப்படையில் டிஜிட்டல் முறையில் பட்டங்களை வழங்கினார்.

இந்த கல்விக்கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றிய பிரதமர், மெட்ரோ ரயில் வசதியைப் பெறுவதால் கான்பூர் நகருக்கு இது மகத்தான நாளாகும். மேலும் மாணவர்கள் பயிற்சி நிறைவுப் பெறுவதால் உலகத்திற்கு விலை மதிப்பில்லாத பரிசை கான்பூர் வழங்கியிருக்கிறது. மதிப்புமிக்க இந்த கல்விக்கழக மாணவர்களின் பயணம் பற்றி பேசிய பிரதமர், மாணவர் சேர்க்கைக்கும், கான்பூர் ஐஐடி-யிலிருந்து பயின்று வெளியேறுவதற்கும் இடையே “உங்களுக்குள் மகத்தான மாற்றத்தை நீங்கள் உணர வேண்டும். இங்கே வருவதற்கு முன் அறியாதவைப் பற்றிய அச்சம் இருந்திருக்க வேண்டும். அல்லது அறியாததுப் பற்றிய கேள்வி இருந்திருக்க வேண்டும். இப்போது அறியாததைப் பற்றிய அச்சம் இல்லை. மொத்த உலகத்தையும் கண்டறியவதற்கான துணிவை நீங்கள் இப்போது பெற்றிருக்கிறீர்கள். அறியாதவைப் பற்றிய கேள்வி இப்போது இல்லை. இப்போது அது சிறந்தவற்றுக்கான தேடலையும் மொத்த உலகத்தை ஆதிக்கம் செலுத்தும் கனவையும் கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.

கான்பூரில் வரலாற்றுப்பூர்வமான, சமூக ரீதியான பாரம்பரியம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் அதிக பன்முகத்தன்மைக் கொண்ட சில நகரங்களில் ஒன்றாக கான்பூர் இருக்கிறது என்றார். “சக்தி சவ்ரா சதுக்கத்திலிருந்து மதாரி பாசி வரையும், நானா சாகேப்பிலிருந்து பட்டுகேஷ்வர் தத் வரையும் இந்த நகரை நாம் சுற்றிப் பார்க்கும் போது புகழ் மிக்க கடந்த காலத்திற்குள் நாம் பயணிப்பது போலவும் தோன்றும். விடுதலைப் போராட்ட தியாகங்களின் பெருமைகளை உணர்வது போலவும் தோன்றும்” என்று பிரதமர் நினைவு கூர்ந்தார்.

பயின்று வெளியேறும் மாணவர்களின் வாழ்க்கையின் தற்போதைய நிலையின் முக்கியத்துவத்தைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். 1930-களில் காலம் பற்றி அவர் விவரித்தார். “அந்த காலத்தில் 20-25 வயதிலிருந்த இளைஞர்கள் சுதந்திரம் பெற்ற 1947 வரை அமைதியான ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்க வேண்டும். அதுவே அவர்களது வாழ்க்கையின் பொன்னான கட்டமாக இருந்தது. இன்று நீங்களும் கூட அதே போன்ற பொன்னான காலத்தில் அடியெடுத்து வைக்கிறீர்கள். நாட்டுக்கு இது அமிர்த காலமாக இருப்பது போலவே உங்கள் வாழ்க்கையிலும் இது அமிர்த காலமாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.

கான்பூர் ஐஐடியின் சாதனைகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இன்று தொழில் முறையாளர்களுக்கான தற்போதைய தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை விவரமாக எடுத்துரைத்தார். செயற்கை நுண்ணறிவு எரிசக்தி, பருவநிலைத் தீர்வுகள், சுகாதாரத் தீர்வுகளில் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் நம்பிக்கை பற்றி குறிப்பிட்ட பிரதமர், “இவையெல்லாம் உங்களின் வெறும் பொறுப்புகள் மட்டுமல்ல, நீங்கள் நிறைவேற்ற இருக்கும் நல்ல வாய்ப்பு பல தலைமுறைகளின் கனவுகளாகும். விருப்பமான இலக்குகளை முடிவு செய்கிற இந்த காலத்தில் உங்களின் திறன் முழுவதையும் பயன்படுத்தி அவற்றை சாதிக்க வேண்டும்” என்றார்.

21 ஆம் நூற்றாண்டு என்பது முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தால் இயக்கப்படுவது என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார். இந்த தசாப்தத்திலும் கூட தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் அதன் செல்வாக்கை அதிகரிக்கவிருக்கிறது. தொழில்நுட்பம் இல்லாத வாழ்க்கை பூர்த்தியடையாததாகும். வாழ்க்கையில் போட்டியும், தொழில்நுட்பமும் நிறைந்த இந்த காலத்தில் மாணவர்கள் நிச்சயம் அவற்றிலிருந்து விடுபட்டு விடுவார்கள் என்று கூறி அவர் வாழ்த்துத் தெரிவித்தார். தேசத்தின் மனவோட்டத்தை அறிந்து மாணவர்களுக்கு அவற்றைப் பிரதமர் எடுத்துரைத்தார். “இன்று நாட்டின் சிந்தனையும், அணுகுமுறையும் உங்களைப் போலவே இருக்கிறது. முந்தைய காலம் துல்லியமான செயல்பாட்டு சிந்தனையாக இருந்திருந்தால் தற்போதைய சிந்தனை செயல்வடிவமாகவும், பயன் விளைவிப்பதாகவும் இருந்திருக்கும். முந்தைய காலம் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியாக இருந்திருந்தால் இன்றைய தீர்மானங்கள் அந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாக இருந்திருக்கும்” என்று அவர் கூறினார்.

சுதந்திரத்தின் 25-வது ஆண்டிலிருந்து தேசத்தின் கட்டமைப்பிற்குப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நேரம் வீணாக்கப்பட்டதாகப் பிரதமர் குற்றம் சாட்டினார். “நாட்டின் சுதந்திரம் 25 ஆண்டுகளை நிறைவு செய்தபோது நமது சொந்த காலில் நிற்பதற்கு ஏராளமானவற்றை நாம் செய்திருக்க வேண்டும். அதன் பிறகு காலம் மிகவும் கடந்து விட்டது, நாடு ஏராளமான நேரத்தை வீணாக்கியுள்ளது. இதற்கிடையில் இரண்டு தலைமுறைகள் கடந்து விட்டன. எனவே இரண்டு நிமிடங்களைக் கூட நாம் வீணாக்கக் கூடாது” என்று அவர் குறிப்பிட்டார்.

பொறுமையற்று தாம் பேசுவதாக இருந்தால் அதற்கான காரணம், பயின்று வெளியேறும் மாணவர்கள், “அதே போல் தற்சார்பு இந்தியாவுக்குப் பொறுமைற்றவர்களாக மாற வேண்டும். தற்சார்பு இந்தியா என்பது எவரையும் சார்ந்திருக்காத முழுமையான சுதந்திர வடிவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்” என்று தாம் விரும்புவதுதான் என்று பிரதமர் கூறினார். ஒவ்வொரு நாடும் வெளிப்படுத்துவதற்கு ஒரு செய்தியையும், நிறைவேற்றுவதற்கு ஒரு இயக்கத்தையும் அடைவதற்கு ஒரு இலக்கையும் கொண்டிருக்கிறது. நாம் தற்சார்பு உடையவர்களாக இல்லாவிட்டால், நமது நாடு எவ்வாறு அதன் விருப்பங்களை நிறைவேற்றும், எவ்வாறு அதன் இலக்குகளை அடையும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியதைப் பிரதமர் மேற்கோள் காட்டினார்.

அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம் பிரதமரின் ஆராய்ச்சி உதவித் தொகை, புதிய கல்விக்கொள்கை போன்ற முன்முயற்சிகளுடன் புதிய மனஉணர்வுகளும், புதிய வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் கூறினார்.  வணிகம் செய்வதை எளிதாக்குவதில் மேம்பாடு, கொள்கைகளுக்கான தடைகள் அகற்றம் ஆகியவற்றின் விளைவுகள் தெளிவாகத் தெரிகின்றன. சுதந்திரத்தின் இந்த 75-வது ஆண்டில் 75-க்கும் அதிகமான அதிக முதலீடு கொண்ட 75-க்கும் அதிகமான தொழில் நிறுவனங்களையும், 50,000-க்கும் அதிகமான புதிய தொழில்களையும் இந்தியா பெற்றிருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார். உலகின் இரண்டாவது பெரிய புதிய தொழில்களின் குவி மையமாக இந்தியா இன்று உருவாகியுள்ளது. பல புதிய தொழில்கள் ஐஐடிகளைச் சேர்ந்த இளைஞர்களால் தொடங்கப்பட்டுள்ளன. உலகளவில் நாடு உயர்ந்து நிற்க மாணவர்கள் பங்களிக்க வேண்டும் என்ற தமது விருப்பத்தைப் பிரதமர் வெளிப்படுத்தினார். “இந்திய நிறுவனங்களையும், இந்திய தயாரிப்புகளையும் விரும்பாத இந்தியர்கள் உலகப் பொருட்களுக்கு மாறி விடுகிறார்கள். ஐஐடிகளை அறிந்தவர்கள், இங்குள்ள திறமைகளை அறிந்தவர்கள், இங்குள்ள பேராசிரியர்களின் கடின உழைப்பை அறிந்தவர்கள் ஐஐடிகளின் இளைஞர்கள் நிச்சயமாக இதை மாற்ற முடியும் என்று நம்புவார்கள்” என்று அவர் கூறினார்.

சவால்கள் இருக்கும் போது வசதிகளை பார்க்கக் கூடாது என்று மாணவர்களுக்குப் பிரதமர் அறிவுரை கூறினார். ஏனெனில், “நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாழ்க்கையில் சவால்கள் இருக்கும். அவற்றிலிருந்து தப்பி ஓடுகின்றவர்கள் அவற்றுக்கு பலியாகி விடுவார்கள். ஆனால் சவால்களை நீங்கள் எதிர்கொண்டால் நீங்கள் வேட்டையாடுபவராகவும், சவால்கள் வேட்டையாடப்படுபவையாகவும் மாறும்” என்று பிரதமர் கூறினார்.

தனிப்பட்ட முறையில் நெகிழ்ச்சியோடு மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பிரதமர், உணர்வு, ஆர்வம், கற்பனை, படைப்பாக்கம் ஆகியவற்றை தங்களுக்குள் உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டும் என்றார். வாழ்க்கையில் தொழில்நுட்ப திறன் இல்லாத அம்சங்களில் உணர்வுபூர்வமாக இருக்குமாறு அவர்களை கேட்டுக் கொண்டார். “மகிழ்ச்சியையும், அன்பையும் பகிர்ந்துக் கொள்ள நேரம் வரும்போது கடவுச்சொல் எதையும் வைத்திருக்காதீர்கள், திறந்த மனதுடன் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்” என்று அவர் கூறினார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
How NPS transformed in 2025: 80% withdrawals, 100% equity, and everything else that made it a future ready retirement planning tool

Media Coverage

How NPS transformed in 2025: 80% withdrawals, 100% equity, and everything else that made it a future ready retirement planning tool
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 20, 2025
December 20, 2025

Empowering Roots, Elevating Horizons: PM Modi's Leadership in Diplomacy, Economy, and Ecology