தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் மோகன்லாருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திரு மோகன்லால் திரைத் துறையில் சிறப்பாக செயல்பட்டு, பல கதாபாத்திரங்களில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்துவதில் தனித்திறன் வாய்ந்தவர் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். பல ஆண்டுகளாக ஏராளமான படைப்புகளுடன், மலையாள சினிமாவிலும், நாடகத்துறையிலும் முன்னணி நட்சத்திரமாக அவர் திகழ்கிறார் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கேரள கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் அவர் என்றும் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி படங்களிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். அனைத்து தளங்களிலும் அவரது திரைப்பட, நாடக நடிப்புத் திறமைகள் ஊக்கமளிப்பதாக உள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"திரு மோகன்லால் அவர்கள் உயர் சிறப்புக்கும், பலவகை கதாபாத்திரங்களில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். பல ஆண்டுகளாகத் தமது சிறப்பான படைப்புகளுடன், மலையாள சினிமா, நாடகத்துறை ஆகியவற்றில் அவர் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார். கேரள கலாச்சாரத்தின் மீது அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மொழிகளிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். அனைத்து தளங்களிலும் அவரது திரைப்பட, நாடக நடிப்புத் திறமை உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது.
தாதாசாகேப் பால்கே விருது பெறுவதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனைகள் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்."
@Mohanlal
Shri Mohanlal Ji epitomises excellence and versatility. With a rich body of work spanning decades, he stands as a leading light of Malayalam cinema, theatre and is deeply passionate about the culture of Kerala. He has also delivered remarkable performances in Telugu, Tamil,… https://t.co/4MWI1oFJsJ pic.twitter.com/P0DkKg1FWL
— Narendra Modi (@narendramodi) September 20, 2025
ശ്രീ മോഹൻലാൽ ജി പ്രതിഭയുടെയും അഭിനയ വൈവിധ്യത്തിന്റെയും പ്രതീകമാണ്. പതിറ്റാണ്ടുകൾ നീണ്ട സവിശേഷമായ കലാസപര്യയിലൂടെ, മലയാള സിനിമയിലും നാടകത്തിലും പ്രമുഖ വ്യക്തിത്വമായി നിലകൊള്ളുന്ന അദ്ദേഹത്തിന്, കേരള സംസ്കാരത്തിൽ തീവ്രമായ അഭിനിവേശമുണ്ട്.തെലുങ്ക്, തമിഴ്, കന്നഡ, ഹിന്ദി സിനിമകളിലും… https://t.co/4MWI1oFJsJ pic.twitter.com/MJp4z96RlV
— Narendra Modi (@narendramodi) September 20, 2025


