உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் வருத்தமளிக்கிறது. விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி”
Saddened by the loss of lives due to a road accident in Pithoragarh, Uttarakhand. Condolences to those who have lost their loved ones in the mishap. May the injured recover soon.
— PMO India (@PMOIndia) July 15, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The…


