நாகாலாந்த் மாநிலத்தின் மூத்த தலைவரான திரு இம்காங் எல். இம்சென்-ன் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாகாலாந்தின் வளர்ச்சிக்கு திரு இம்சென் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக அவர் நினைவுகூரப்படுவார் என்று பிரதமர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் பல ஆண்டுகளாக பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததுடன், பழங்குடி சமூகங்களின் நலனுக்காக மிகுந்த உறுதியுடன் செயல்பட்டார். சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராக அவர் பதவி வகித்த காலம் அதன் தாக்கம் மற்றும் அர்ப்பணிப்புக்காக என்றும் நினைவுகூரப்படும்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் திரு மோடி கூறியதாவது:
"நாகாலாந்தின் வளர்ச்சிக்கு திரு இம்காங் எல். இம்சென், அவரது சிறப்பான பங்களிப்பிற்காக நினைவுகூரப்படுவார். அவர் பல ஆண்டுகளாக பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டார். குறிப்பாக பழங்குடி சமூகங்களின் நலனில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராக அவர் பதவி வகித்த காலம், அன்புடன் நினைவுகூரப்படும். நாகாலாந்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்கும் அவர் குறிப்பிடத்தக்க பங்களித்தார். இந்தத் துயரமான நேரத்தில் அன்னாரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.”
Shri Imkong L. Imchen Ji will be remembered for his outstanding contribution to Nagaland's development. He had been active in public life for several years and was particularly passionate about welfare of tribal communities. His legislative and ministerial tenures will be fondly…
— Narendra Modi (@narendramodi) November 12, 2025


