பீகார் மாநிலத்தின் பிரபல அரசியல் கட்சி தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வானின் புண்ணிய திதியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பீகார் மாநிலத்தின் பிரபல அரசியல் கட்சி தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான், சமூக நீதியின் அடையாளமாகவும் பொதுச் சேவையில் அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயலாற்றியவர். அவர் மறைந்த புண்ணிய திதியில் மனமாற மரியாதை செலுத்துகிறேன். நலிவடைந்த மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மேம்பாட்டிற்காகவும் அவர் அயராது பணியாற்றியவர். அரசியல் மற்றும் நாட்டைக் கட்டமைப்பதில் அவர் அளித்த பங்களிப்பு என்றென்றும் நினைவு கூரப்படும்.”
सामाजिक न्याय के प्रतीक और जनसेवा के प्रति समर्पित बिहार के लोकप्रिय नेता और पूर्व केंद्रीय मंत्री रामविलास पासवान जी को उनकी पुण्यतिथि पर मेरी भावभीनी श्रद्धांजलि। उन्होंने हमेशा समाज के वंचित और शोषित समुदायों के कल्याण के लिए कार्य किया। राजनीति के साथ-साथ राष्ट्र निर्माण के…
— Narendra Modi (@narendramodi) October 8, 2025


