பிரதமர் திரு நரேந்திர மோடியுடன், அமெரிக்க அதிபர் திரு டொனால்டு ஜே டிரம்ப் தொலைபேசி வாயிலாக உரையாடினார். பிரதமர் மோடியின் 75-வது பிறந்த தினத்தையொட்டி அதிபர் திரு டிரம்ப் தமது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்தியா- அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய உத்திசார்ந்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து தங்களது உறுதிப்பாடுகளை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினார்கள்.
பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய மேம்பாடுகள் குறித்த கருத்துகளையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். உக்ரைன் மோதலை தவிர்க்க அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக அதிபர் டிரம்பின் முன் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று பிரதமர் கூறினார். இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதென்று முடிவு செய்தனர்.



