ஸ்பெயின் அதிபர்  திரு. பெட்ரோ சான்செஸ் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இரு தலைவர்களும், குறிப்பாக பாதுகாப்பு, தற்காப்பு, தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில்,  இந்தியா-ஸ்பெயின் நட்புறவை அதிகரிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தனர்,

2026-ம் ஆண்டை இரு நாடுகளும் இந்தியா-ஸ்பெயின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆண்டாகக் கொண்டாடுகின்றன.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  தனித்தனி இடுகைகளில், திரு  மோடி கூறியிருப்பதாவது:

“தில்லியில் அதிபர்  பெட்ரோ சான்செஸுடன் ஒரு பயனுள்ள சந்திப்பை நடத்தினேன். குறிப்பாக பாதுகாப்பு, தற்காப்பு, தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில், இந்தியா-ஸ்பெயின் நட்பை அதிகரிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தேன். 2026-ம் ஆண்டை இந்தியா-ஸ்பெயின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் ஏஐ ஆண்டாக நமது நாடுகள் கொண்டாடுகின்றன. இது மக்களிடையேயான தொடர்புகளை ஆழப்படுத்தும். பல்கலைக்கழகங்களின் ஒரு பெரிய குழுவும் இந்தியாவிற்கு வருவதைக் கண்டு மகிழ்ச்சி. இதுவும் நமது மக்களை இணைப்பதில் நீண்ட தூரம் செல்லும்.

ஐரோப்பிய யூனியனுடனான வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஸ்பெயினுடனான பொருளாதார கூட்டாண்மையில் மிகவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் நமது நாடுகளின் மக்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும்.”

 

“Tuve una reunión productiva con el presidente Pedro Sánchez en Delhi. Hablamos de formas de fortalecer la amistad entre la India y España, especialmente en ámbitos como la defensa, la seguridad, la tecnología y otros.

Nuestros países celebran 2026 como el Año India-España de la Cultura, el Turismo y la IA. Esto profundizará los vínculos entre nuestros pueblos. Me alegra ver que también ha venido a la India una gran delegación de universidades. Esto también contribuirá en gran medida a acercar a nuestros pueblos.

El histórico acuerdo de libre comercio con la UE tendrá un impacto muy positivo en la asociación económica con España y brindará nuevas oportunidades a los ciudadanos de nuestros países.

@sanchezcastejon”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Italy and India: A strategic partnership for the Indo-Mediterranean

Media Coverage

Italy and India: A strategic partnership for the Indo-Mediterranean
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 19, 2026
May 19, 2026

Exports Up, Economy Strong, World Collaborating: PM Modi's Reforms Delivering Jobs, Growth & Green Future