உத்தரப்பிரதேசத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையால் வாரணாசியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இந்திய மேயர்கள் மாநாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி 2021, டிசம்பர் 17 அன்று காலை 10.30 மணிக்குக் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளார்.  நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மேயர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள். இந்த மாநாட்டின் மையப் பொருள் “புதிய நகர்ப்புற இந்தியா” என்பதாகும்.

 நகரப்பகுதிகளில் வாழ்க்கை எளிதாக நடத்தப்படுவதை உறுதி செய்ய பிரதமர் தொடர்ச்சியான முயற்சியை மேற்கொண்டு வருகிறார். நகர்ப்புறத்தில் பாழடைந்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் குறைப்பாட்டுப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண அரசு பலவகையான திட்டங்களைத் தொடங்கியுள்ளது. முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிகளுக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் இது நகர்ப்புற வரைபடத்தில் வெகுவான முன்னேற்றத்திற்கும், மாற்றத்திற்கும் சான்றாக உள்ளது.

நகர்ப்புற வளர்ச்சியில் மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச அரசின் முக்கிய சாதனைகளை எடுத்துக்காட்டும் கண்காட்சி ஒன்றுக்கும் டிசம்பர் 17 முதல் 19 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச முதலமைச்சரும், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சரும்  இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India's industrial production beats estimates; growth seen at 5.9% YoY in May

Media Coverage

India's industrial production beats estimates; growth seen at 5.9% YoY in May
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Delegation from Catholic Bishops' Conference of India calls on PM
July 12, 2024

A delegation from the Catholic Bishops' Conference of India called on the Prime Minister, Shri Narendra Modi today.

The Prime Minister’s Office posted on X:

“A delegation from the Catholic Bishops' Conference of India called on PM Narendra Modi. The delegation included Most Rev. Andrews Thazhath, Rt. Rev. Joseph Mar Thomas, Most Rev. Dr. Anil Joseph Thomas Couto and Rev. Fr. Sajimon Joseph Koyickal.”