காஸியாபாதில் நாளை (10.03.2019) நடைபெறும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 50-வது உருவாக்கதின விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
காஸியாபாதின் இந்திராபுரத்தில் உள்ள 5-வது படைப்பிரிவு முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் அணிவகுப்பைப் பிரதமர் பார்வையிடுவார். சிறப்புமிக்க, மெச்சத்தக்க சேவைகளுக்காக காவலர் மற்றும் தீயணைப்புச் சேவை விருதுகளை அவர் வழங்குவார்.
தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார். பின்னர், சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களிடையே அவர் உரையாற்றுவார்.


