The thoughts and ideals of Bapu have the power to help us overcome the menace of terrorism and climate change, two challenges humanity faces in these times: PM
Through his lifestyle, Bapu showed what living in harmony with nature is: PM Modi

 

பிரதமர் திரு நரேந்திர மோடி, சியோல் நகரில் உள்ள யோன்சி பல்கலைக் கழகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையை இன்று திறந்து வைத்தார்.

தென்கொரிய அதிபர் திரு மூன் ஜே இன், தென்கொரிய குடியரசின் முதல் குடிமகள் திருமதி கிம் ஜூங் சூக்,  ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச் செயலர் திரு பான் கி மூன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், யோன்சி பல்கலைக் கழகத்தில் மகாத்மாவின் மார்பளவுச் சிலையை திறந்து வைப்பது தனக்கு கிடைத்த கவுரவம் என்று குறிப்பிட்டார். 

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இத்தருணத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது மிகவும் சிறப்பானது என்று பிரதமர் தெரிவித்தார்.

தற்போது மனித குலம் எதிர்கொண்டுள்ள இரண்டு முக்கிய சவால்களான தீவிரவாதப் பிரச்சினையையும், பருவநிலை மாற்றத்தையும் எதிர்கொள்ள மகாத்மாவின் கருத்துக்களும், அறிவுரைகளும் நமக்கு உதவும் ஆற்றல் வாய்ந்தவை என்று அவர் கூறினார்.

இயற்கையுடன் எவ்வாறு நல்லிணக்கத்துடன் வாழ்வது என்றும், கார்பன் வெளியீட்டை எப்படி குறைப்பது என்றும், தனது வாழ்க்கை முறையின் மூலம் எடுத்துக்காட்டியவர் மகாத்மா காந்தி என்று பிரதமர் குறிப்பிட்டார்.  வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான, பசுமையான, புவிப்பந்தை விட்டுச் செல்வது முக்கியமானது என்பதையும் மகாத்மா நமக்கு எடுத்துக்காட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தென்கொரியாவில் உள்ள மிக முக்கியமான பல்கலைக் கழகங்களில் யோன்சி பல்கலைக் கழகமும் ஒன்றாகும். 

தென்கொரியாவில், மகாத்மா காந்தி உலக அமைதியின் சின்னமாக மதிக்கப்படுகிறார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s GDP To Grow 7% In FY26: Crisil Revises Growth Forecast Upward

Media Coverage

India’s GDP To Grow 7% In FY26: Crisil Revises Growth Forecast Upward
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 16, 2025
December 16, 2025

Global Respect and Self-Reliant Strides: The Modi Effect in Jordan and Beyond