We will break the backbone of terrorism in Jammu and Kashmir and fight it with all our might: PM Modi
Our government is committed to restore dignity of displaced Kashmiri Pandits: PM Modi
PM Modi congratulates people of Jammu Kashmir for making the state Open Defecation Free

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவோருக்கு நாடு சரியான பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் திரு.நரேந்திரமோடி கூறியிருக்கிறார். ஸ்ரீநகரில் இன்று (3.2.2019) பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், “ஒவ்வொரு பயங்கரவாதியும் உகந்த முறையில் கையாளப்படுவார். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை முறிப்போம், நமது முழு பலத்தையும் பயன்படுத்தி அதனை எதிர்த்துப் போராடுவோம்” என்று கூறினார்.

பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுகையில் தனது இன்னுயிரை ஈந்த நஸீர் அகமது வாணிக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார். “எனது மரியாதை கலந்த அஞ்சலியை நஸீர் அகமது வாணி மற்றும் நாட்டின் அமைதிக்காக உயிர்த்தியாகம் செய்த இதர ராணுவ வீரர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நஸீர் அகமது வாணிக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. இவரது வீர, தீரம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் நாட்டின் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது” என்று பிரதமர் கூறினார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். இம்மாநிலத்தில் மிகப்பல ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார். மோசமான பருவ நிலையையும் பொருட்படுத்தாமல் தேர்தலில் வாக்களித்த மக்களை அவர் பாராட்டினார். இது அவர்கள் ஜனநாயகத்தின் மீதும் மாநில மேம்பாட்டின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்று அவர் கூறினார்.

மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான தனது முன்னுரிமைத் திட்டங்களைப் பட்டியலிட்ட பிரதமர், “ரூ.6,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்க நான் இங்கு வந்துள்ளேன். இந்தத் திட்டங்கள் அனைத்தும் ஸ்ரீநகரைச் சுற்றியுள்ள பகுதிகளின் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க உதவுபவை” என்றும் கூறினார்.
ஜம்மு-காஷ்மீருக்கான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை ஸ்ரீநகரில் பிரதமர் திறந்து வைத்தார். புல்வாமா மாவட்டம் அவந்திப்போராவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதனால் மாநிலத்தின் அடிப்படை சுகாதார வசதி மேம்பாடு அடையும் என்றார் அவர். இந்த மருத்துவமனை உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்தத் திட்டத்தினால் இதுவரை சுமார் 10 லட்சம் பேர் பயனடைந்து இருப்பதாகவும், ஜம்மு-காஷ்மீரில் மட்டும் 30 லட்சம் பேருக்கு இது பயனளிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

பந்திப்போராவில் முதலாவது கிராமப்புற பிபிஓ-வை பிரதமர் திறந்து வைத்தார். இதன் மூலம் பந்திப்போரா மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உயரும் என்று கூறினார். இந்த மண்டலத்தின் இளைஞர்களுக்கு பந்திப்போராவில் உள்ள பிபிஓ வேலை வாய்ப்பு அளிக்கும் என்று கூறினார்.
குடிபெயர்ந்து சென்று மீண்டும் காஷ்மீர் திரும்ப விரும்பும் மக்களுக்கு மத்திய அரசு முழுப் பாதுகாப்பு வழங்கும் என்று அவர் தெரிவித்தார். காஷ்மீரிலிருந்து குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு தற்காலிக குடியிருப்பு வழங்குவதற்கென சுமார் 700 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். இத்தகையோரை பணியில் அமர்த்த 3,000 பதவிகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

தேசிய உச்சாட்டார் கல்வி இயக்கத்திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டங்களை டிஜிட்டல் முறையில் பிரதமர் தொடங்கி வைத்தது ஒரு முக்கிய அம்சமாகும். ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார், குப்வாரா, பாரமுல்லா ஆகிய இடங்களில் 3 முன்மாதிரி பட்டப்படிப்பு கல்லூரிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஜம்மு பல்கலைக்கழகத்தில், தொழில்முனையத்துடன், புதுமைப்படைப்பு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

ஜலந்தர் – சாம்பா – ரஜோரி – சோஃபியான் – அமர்கர் (சோப்போர்) இடையிலான 400 கிலோ வோல்ட் நேர்மின்சார வழிப்பாதையை பிரதமர் தொடங்கி வைத்தார். ஜம்மு-காஷ்மீரில் மின்கட்டமைப்பு இணைப்புகள் இதனால் மேம்பாடு அடையும்.
இதற்கான நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், முந்தைய ஆட்சிக்காலத்தில் பல்வேறு பெரிய திட்டங்கள் புதுதில்லி விஞ்ஞான்பவனிலிருந்து துவக்கி வைக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பல்வேறு மண்டலங்களின் திட்டங்களை அந்தந்த இடங்களிலேயே திறந்து வைக்க முடிவு செய்துள்ளது. “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை எமது அரசு ஜார்கண்டில் இருந்தும், உஜ்வாலா திட்டத்தை உத்தரப்பிரதேசத்தில் இருந்தும், பிரதமரின் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்தை மேற்கு வங்கத்தில் இருந்தும், கைத்தறி இயக்கத் திட்டத்தை தமிழ்நாட்டிலும், பெண்குழந்தையைப் பாதுகாப்போம், பெண்குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம் என்ற திட்டத்தை ஹரியானாவில் இருந்தும் தொடங்கி வைத்தது” என்று பிரதமர் கூறினார்.

2018 செப்டம்பரிலேயே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலமாக மாற்றியதற்கு பிரதமர் மாநில மக்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.
இந்தியாவில் புதுமைப்படைப்பு, தொழில் கரு உருவாக்கி வளர்த்தல், தொடக்க நிலை குறித்த புதிய மனப்பான்மை ஏற்பட்டிருப்பதாகவும் தொடக்க நிலை நிறுவனங்கள் இயக்கம் விறுவிறுப்படைந்து இருப்பதாகவும் பிரதமர் கூறினார். கடந்த 3 அல்லது நான்காண்டுகளில் 15,000 தொடக்க நிலை நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியதாகவும் இவற்றில் பாதி முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் செயல்படுவதாகவும் பிரதமர் கூறினார்.

காண்டர்பால் மாவட்டம் செஃபோராவில் பிரதமர் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தை தொடங்கி வைத்தார். இளைஞர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் இந்த உள்ளரங்கம் விளையாட்டுகளில் இளைஞர்கள் பயிற்சி பெற உதவும். விளையாட்டுத் திறன்களை கண்டுபிடிக்கவும், விளையாட்டு அடிப்படை வசதி மேம்பாட்டுக்காகவும் செயல்படுத்தப்படும் கேலோ இந்திய இயக்கம் ஜம்மு-காஷ்மீரின் 22 மாவட்டங்களிலும் நடைபெற்றது என்று அவர் கூறினார்.

பிரபலமான தால் ஏரிக்கு சென்றுபார்த்த பிரதமர் அங்குள்ள அனைத்து வசதிகளையும் ஆய்வு செய்தார்.

பிரதமர் இந்த மாநிலத்தில் ஒரு நாள் பயணத்தின்போது அதன் 3 மண்டலங்களான லே, ஜம்மு, ஸ்ரீநகர் ஆகியவை அனைத்துக்கும் சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s digital economy enters mature phase as video dominates: Nielsen

Media Coverage

India’s digital economy enters mature phase as video dominates: Nielsen
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Share your ideas and suggestions for 'Mann Ki Baat' now!
May 05, 2026

Prime Minister Narendra Modi will share 'Mann Ki Baat' on Sunday, May 31st. If you have innovative ideas and suggestions, here is an opportunity to directly share it with the PM. Some of the suggestions would be referred by the Prime Minister during his address.

Share your inputs in the comments section below.