இன்று பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் திரு டோனால்ட் ட்ரம்ப்-ஐ சந்தித்தார். இரு தலைவர்களும், இரு தரப்பு உறவு குறித்தும், சர்வதேச விஷயங்கள் குறித்தும், பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டனர். பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணிக்கு, சிறப்பான வரவேற்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டார். “அதிபர் டோனால்ட் ட்ரம்ப் நிறைந்த அன்புடன் என்னை வரவேற்றார். வரவேற்புக்கு அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்,” என்றார்..






