ASEAN is central to India's 'Act East' policy: PM Modi
Our engagement is driven by common priorities, bringing peace, stability and prosperity in the region: PM at ASEAN
Enhancing connectivity central to India's partnership with ASEAN: PM Modi
Export of terror, growing radicalisation pose threat to our region: PM Modi at ASEAN summit

மாண்புமிகு பிரதமர் தொங்லோன் சிசோலித் அவர்களே,

மாண்புமிகு பங்கேற்பாளர்களே,

இது எனது மூன்றாவது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு ஆகும். ஆசியான் நாடுகளுடன் கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் வளர்த்துள்ள நெருங்கிய நட்புறவைப் புதுப்பித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பிரமாதமான ஏற்பாட்டிற்கும், அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கும் நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

பாரம்பரியம் மிக்க அழகிய நகரமான வியன்டியானுக்கு வருகை தந்திருப்பது இந்த நகரத்துக்கும் இந்தியாவுக்கு இடையே உள்ள ஆழமான வரலாற்று பண்பாட்டு இணைப்புகளை என் நினைவுக்கு கொண்டு வருகிறது. ஆசியான்-இந்தியா உறவுகளுக்கு தேச ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமை நிலையை ஏற்றி்ருப்பதற்கு வியட்நாமுக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பங்கேற்பாளர்களே,

ஆசியான் நாடுகளுடன் எங்களது உறவு பகிர்ந்துக் கொள்ளப்பட்ட நாகரீக பாரம்பரியத்தை பகிர்ந்துக் கொள்ளும் உறுதியான அடித்தளத்துடன் நின்றுவிடவில்லை இந்த மண்டலத்தில் நமது சமுதாயங்களை பாதுகாப்பது என்ற பொதுவான முக்கிய முன்னுரிமைகள் மற்றும் அமைதி, ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றை கொண்டு வருவது முதலியவற்றாலும் வேகம் பெறுகிறது. இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாடு என்ற கொள்கைக்கு ஆசியான் மத்தியமானது. எங்களது உறவுகள் இந்த மண்டலத்தில் சமச்சீர்மை, நல்லிணக்கம் ஆகியவற்றின் ஆதாரங்களாகவும் உள்ளன.

மாண்புமிகு பங்கேற்பாளர்களே,

எமது முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பு ஆசியானின் பாதுகாப்பு, பொருளாதாரம், சமூகப்பண்பாடு ஆகிய முக்கிய துறைகளின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. மேலும் 2016 -2020 காலத்திற்கான ஆசியான் – இந்தியா செயற்திட்டம் தமது நோக்கங்களை நிறைவேற்றச் சிறப்பாகப் பயன்பட்டுள்ளது. இந்த செயற்திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 130 செயல்பாடுகளில் ஐம்பத்து நான்கினை நாங்கள் ஏற்கனவே நாங்கள் செயற்படுத்தி உள்ளோம்.

மாண்புமிகு பங்கேற்பாளர்களே,

ஆசியான் உடனான இந்தியாவின் முக்கிய ஒத்துழைப்பின் அடித்தளத்தில் பொருண்ம, டிஜிட்டல், பொருளாதார, நிறுவன மற்றும் பண்பாட்டு இணைப்பு பரிமாணங்களை உயர்த்துவது அமைந்துள்ளது. எமது பொருளாதார வெற்றியை இணைத்துக் கொள்வதற்கான தயார் நிலை, ஆசியான் நாடுகளுடன், குறிப்பாக CLMV நாடுகள் என்று அழைக்கப்படும் கம்போடியா, லாவோஸ், மியான்மார், வியட்நாம் ஆகியவற்றுடன், மேம்பாட்டு அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளுதல் எமது செயல்பாட்டுக்கு ஆற்றல் அளிக்கின்றன.

மாண்புமிகு பங்கேற்பாளர்களே,

பாரம்பரிய, பாரம்பரியமற்ற சவால்கள் வளர்ந்து வரும் நிலையில் அரசியல்-பாதுகாப்பு ஒத்துழைப்பு நமது நல்லுறவுகளில் புதிதாக உருவாகியுள்ள முக்கிய தூணாகும். வெளிநாடுகளில் பயங்கரவாதத்தை பரப்புவது அதிகரித்தல் வெறுப்புக் கொள்கைகள் மூலமாக வளர்ந்து வரும் அடிப்படை வாதம், தீவிர வன்முறைகள் பரவுதல் ஆகியன நமது சமுதாயங்களுக்கு எதிரான பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை வரையறை செய்கின்றன. இந்த அச்சுறுத்தல் உள்ளூர், மண்டல, நாடுகளுக்கிடையேயானதாக ஒரே சமயத்தில் உருவெடுத்துள்ளது. எமது ஆசியான் உடனான ஒத்துழைப்பு இந்த அச்சுறுத்தலுக்கு உரிய பதில் நடவடிக்கையை பல்வேறு நிலைகளில் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு, அனுபவ பகிர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுத்த முயற்சிக்கிறது.

மாண்புமிகு பங்கேற்பாளர்களே,

அடுத்த ஆண்டு நமது உறவுகளில் வரலாற்று சிறப்புமிக்க மைல் கல்லாக இருக்கப்போகிறது. நாம் பேச்சு வார்த்தை ஒத்துழைப்பின் 25 ஆண்டுகள் நிறைவையும், உச்சநிலை பேச்சுவார்த்தைகளில் 15 ஆண்டுகள் நிறைவையும், பாதுகாப்பு ஒத்துழைப்பின் 5 ஆண்டுகள் நிறைவையும் கொண்டாடவிருக்கிறோம்.

2017-ம் ஆண்டு ஆசியான் – இந்தியா வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது இக்கொண்டாட்டங்கள் தொடங்கப்படும். இதனையொட்டி நாங்கள் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட நெறிகள், பொதுவான இலக்குகள் என்ற மையக்கருத்திலான நினைவு உச்சி மாநாட்டை பொறுப்பேற்று நடத்த உள்ளோம். வர்த்தக உச்சி மாநாடு, தலைமை நிர்வாக அதிகாரிகள் அமைப்பு, மோட்டார் கார் போட்டி, படகு போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கலைத் திருவிழாவிற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நினைவு நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு உங்கள் அனைவருடனும் சேர்ந்து உழைப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.

உங்களுக்கு நன்றி,

உங்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றி

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
National Technology Day Special: India’s patent boom is rewiring the auto industry

Media Coverage

National Technology Day Special: India’s patent boom is rewiring the auto industry
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 12, 2026
May 12, 2026

Building a Trusted India: Modi's Leadership in Finance, Manufacturing, and Global Partnerships