First responsibility of the government must be to work for poor, marginalized & underprivileged but sadly, SP isn’t doing so: Shri Modi
PM attacks SP government, says schools in UP do not have teachers in adequate number
Our Government is committed to welfare of farmers in UP, says Shri Narendra Modi
SP, BSP, Congress favouring each other in some way or the other in these elections, alleges PM Modi
For Uttar Pradesh's growth & development, BJP is the only ray of hope, says Prime Minister Modi

இன்று உத்தரபிரதேசம், கன்னோஜில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், பெருந்திரளான மக்களிடையே உரையாற்றினார். திரு.மோடி, உத்தரபிரதேச மக்களிடையே எழுந்துள்ள மிகப்பெரிய எழுச்சியையும், காற்று எத்திசையில் வீசுகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது எனக் குறிப்பிட்டார்.

ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை பறக்கவிட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், அந்த விஞ்ஞானிகள் நாடு முழுவதும் பெருமை கொள்ளச் செய்துள்ளனர் எனக் கூறினார்.

ஏழை, ஒடுக்கப்பட்ட மற்றும் வாடுகின்ற மக்களுக்காக உழைப்பதே அரசின் முதல் கடமை என பிரதமர் தெரிவித்தார். அரசு ஏழைகளுக்கு உணவிட நிதிகளை ஒதுக்குகிறது, ஆனால் உத்தரபிரதேச அரசு ஏழைகளுக்கு உணவிட எந்தவித ஆர்வமும் காட்டவில்லை,” என பிரதமர் கூறினார். மேலும், உத்தரபிரதேசத்தில் உள்ள அரசு, ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கு எதிராக உள்ளது துரதிர்ஷடமானது,” எனவும் அவர் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள மோசமான கல்வி நிலை குறித்து கவலை தெரிவித்த பிரதம மந்திரி திரு. மோடி, உத்தரபிரதேசத்தில் உள்ள பள்ளிகள் போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்களை கொண்டிருக்கவில்லை. இவ்வாறுதான் இந்தியாவின் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டுமா,” எனக் குறிப்பிட்டார்.

தனது அரசுக்கு விவசாயிகளின் நல்வாழ்வே முக்கியமானது என பிரதமர் திரு. மோடி எடுத்துரைத்தார். எங்களது அரசு, உத்தரபிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் நலனுக்கு உறுதிபூண்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களது அரசு, சிறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும்.”

எதிர்க்கட்சிகளை தாக்கி பேசிய பிரதம மந்திரி, “இந்த தேர்தல்களில், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் அனைத்தும் ஒருவருக்கொருவர் ஒரு வகையிலோ அல்லது பிற வகையிலோ உதவி செய்துக்கொள்கின்றனர், முன்பு, அவர்கள் அனைவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சுமத்தினார்கள் ஆனால் இப்போதைய சூழ்நிலையை பாருங்கள், அவர்கள் ஒருவருக்கொருர் எதிராக அறிக்கைகள் விடுவதை தவிர்க்கின்றனர்,” என்றார். மேலும் அவர், “உத்தரபிரதேசத்தின் வளர்ச்சிக்கு, பா.ஜ.க. ஒன்றே நம்பிக்கை ஒளி” என்றார்.

உத்தரபிரதேச முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவை தாக்கி பேசிய திரு.மோடி, “1984-ல் காங்கிரஸ், திரு. முலாயம் சிங் அவர்களை தாக்கி பேசியதை திரு.அகிலேஷ் அவர்கள் நினைவு கூறுவாரா? ஆனால் இன்று நீங்கள் அவர்களிடம் தான் கூட்டு வைத்துள்ளீர்கள்! அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள எஸ்.பி. எதையும் செய்யும் என்பதை இது தெளிவாக காட்டுகிறது..”

மேலும் அவர், எஸ்.பி. அரசாங்கம், மாநிலத்தில் குற்றம் மற்றும் ஊழலை அதிகரிக்கவே உதவியுள்ளது என குற்றம் சாட்டினார். அவர், உத்தரபிரதேசத்தில் எது ‘உயர்ந்துள்ளது” என்றால், குற்றங்களின் எண்ணிக்கை, பணிகளுக்காக இளைஞர்கள் குடியெர்த்ல், ஊழல், வன்முறைகள், வறுமை, இறப்பு விகிதம், பள்ளிப்படிப்பை தொடராமல் விடுபவர்கள் ஆகியவை ஆகும்.”

பிரதமர் திரு.மோடி அவர்கள், அரசு, ஊழலை ஒழிக்கும் வகையில், நிலை 3 மற்றும் 4 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை.அகற்றிவிட்டது என்றார், “முன்பு நிலை 3 மற்றும் 4 பணிகளுக்கு ஊழல் நடைபெற்று வந்தது. நாங்கள் நேர்முகத் தேர்வை அகற்றிவிட்டோம். இது ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.” மேலும் அவர், “125 கோடி இந்திய மக்களின் ஆசியுடன் கருப்புப்பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராட முடிந்தது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

Click here to read the full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
2025 reforms form the base for a superstructure to emerge in late 2020s-early 2030s

Media Coverage

2025 reforms form the base for a superstructure to emerge in late 2020s-early 2030s
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister pays tributes to Shri Atal Bihari Vajpayee ji at ‘Sadaiv Atal’
December 25, 2025

The Prime Minister, Shri Narendra Modi paid tributes at ‘Sadaiv Atal’, the memorial site of former Prime Minister, Atal Bihari Vajpayee ji, on his birth anniversary, today. Shri Modi stated that Atal ji's life was dedicated to public service and national service and he will always continue to inspire the people of the country.

The Prime Minister posted on X:

"पूर्व प्रधानमंत्री श्रद्धेय अटल बिहारी वाजपेयी जी की जयंती पर आज दिल्ली में उनके स्मृति स्थल ‘सदैव अटल’ जाकर उन्हें श्रद्धांजलि अर्पित करने का सौभाग्य मिला। जनसेवा और राष्ट्रसेवा को समर्पित उनका जीवन देशवासियों को हमेशा प्रेरित करता रहेगा।"