பகிர்ந்து
 
Comments

புதுதில்லி தல்கடோரா அரங்கில் இன்று நடைபெற்ற 2019-கிரேடாய் இளைஞர் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
தனது உரையின் போது, 2022 – ஆம் ஆண்டிற்குள் வீடற்ற அனைவருக்கும் வீடு வழங்கும் பணி விரைவாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் சுமார் ஒன்றரை கோடி வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாகவும், இதில் 15 லட்சம் வீடுகள் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்காக கட்டப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய மத்திய அரசின் ஆட்சியில் மொத்தப் பணிகளும் வெளிப்படையாக நடைபெறுவதாகவும் அவர் கூறினார். சரியான நோக்கத்துடன், அரசு, கொள்கைகளைக் கட்டமைக்கும் போது அது ஊழலை ஒழித்து சிறந்த பலன்களை அளிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

மனை வணிக சீரமைப்பு ஆணையகம், மனை வணிக வளர்ச்சியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் இடையேயான நம்பிக்கையை வலுப்படுத்தி இருக்கிறது என்றும், இது 28 மாநிலங்களில் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். இந்த ஆணையகத்தில் 35,000-க்கும் அதிகமான மனை வணிகத் திட்டங்களும், 27,000 மனை வணிக முகவர்களும் பதிவு செய்துள்ளதாகவும், லட்சக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த நான்காண்டுகளில் எளிதாக வர்த்தகம் செய்வது தொடர்பான தரப்பட்டியலில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் எளிதாக வர்த்தகம் செய்வதை உறுதிப்படுத்த அரசு பாடுபட்டு வருகிறது என்றார். கட்டுமான அனுமதிகள் உள்ளிட்ட அனைத்து அரசு அனுமதிகளும் முன்பை விட, விரைவாக அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.

வீட்டு வசதித் துறைக்கும், வீடு வாங்குவோருக்கும் உதவும் வகையில் அரசு முன்னெடுத்திருக்கும் வரிச் சீர்திருத்தங்கள் பற்றி பிரதமர் எடுத்துரைத்தார். பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் குறைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரிச் சலுகைகள் பற்றி விவரித்த பிரதமர், இந்த முன்முயற்சிகளின் ஒட்டுமொத்த விளைவு, வீட்டு வசதித் துறைக்கும், வீடு வாங்குபவர்களுக்கும் உதவும் என்றார்.
சொந்த வீடு வேண்டும் என்ற எளிய குடிமக்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் கிரேடாய் ஆற்றிவரும் பங்கை பிரதமர் பாராட்டினார். “புதிய இந்தியா” வடிவம் பெறும் இவ்வேளையில் இளைஞர் மாநாடு நடப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், புதிய இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதை விவரித்தார்.

முன்னதாக, தல்கடோரா அரங்கத்தில் கிரேடாய் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார்.

நன்கொடைகள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
Govt-recognised startups nearly triple under Modi’s Startup India; these many startups registered daily

Media Coverage

Govt-recognised startups nearly triple under Modi’s Startup India; these many startups registered daily
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 18, 2019
November 18, 2019
பகிர்ந்து
 
Comments

PM Narendra Modi addresses the 250 th Session of Rajya Sabha, a momentous occasion for Indian Democracy

Taking the fight against Malnutrition to another level, Ministry of Women & Child Development launches Bharatiya POSHAN Krishi Kosh in collaboration with Gates Foundation

Ahead of the 250 th Parliamentary Session of the Rajya Sabha PM Narendra Modi chairs an All-Party Meeting; He also convenes NDA Parliamentary Meeting

Positive Changes reflecting on ground as Modi Govt’s efforts bear fruit