Police, forensic science and judiciary are integral parts of criminal justice delivery system: Prime Minister
Greater technological intervention in forensic science can help tackle challenges of cyber security: PM Modi
In order to deal with rapidly changing crime scenario we have to develop newer techniques to make it clear that criminals will not be spared: PM

பிரதமர் திரு. நரேந்திர மோடி  இன்று (23.08.2018) குஜராத் குற்றத்தடய அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.

 இந்த பல்கலைக்கழகத்தையும் அதன் மாணவர்களையும் பிரதமர் முன்னோடிகள் என்று குறிப்பிட்டார். வழக்கத்துக்கு மாறானது என நம்பப்படும் இந்தப் பாடத்தை தேர்ந்தெடுத்ததில் உறுதியுடன் இருந்த மாணவர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இன்றைய நிலையி்ல் இந்தப் பாடம் மிகவும் முக்கியமானது என்று பிரதமர் கூறினார். தன்னம்பிக்கையும் மன உறுதிப்பாடும் கொண்ட மாணவர்களுக்கு எதிர்காலத்தில்  இவை பேருதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்

வலுவான குற்றத்தடயவியல் அமைப்பு சிவில் சமுதாயத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுகிறது, குற்றங்களை கட்டுப்படுத்துகிறது. இந்த வகையில் இந்த அமைப்புகள் திறமைமிக்க காவல்படை, சிறப்பான நீதி அமைப்பு ஆகியவற்றைப் போலவே செயல்படுகின்றன.

  ஒருவர் குற்றம் செய்தால் பிடிபட்டுவிடுவோம் என்ற பயம் அவரிடம் இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் கூறினார்.  இந்த சமயத்தில்தான் குற்றத்தடய அறிவியல் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக பிரதமர் கூறினார்.

  குற்றப்புலனாய்வு, நீதி வழங்குதல் ஆகிய துறைகளில் சர்வதேச மனிதவளத் தொகுப்பினை உருவாக்குவதற்காக குஜராத் குற்றத்தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை பிரதமர் பாராட்டினார். குஜராத் குற்றத்தடய அறிவியல் பல்கலைக்கழகம் உலகப் பாதுகாப்பில் தனது பயிற்சி மற்றும் கல்வி மூலம் சிறப்பாக பங்காற்றுவதாக பிரதமர் கூறினார்.

  கணினி குற்றச்சவால்கள் குறித்து விரிவாக பேசிய பிரதமர், இது  தொடர்பான குற்றத்தடயவியலையும், கணினி குற்றத்தடயவியல் சோதனைக் கூடங்களையும், வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று கூறினார். காப்பீட்டுத் துறையில் குற்றத்தடய அறிவியலின் முக்கியத்துவத்தையும் பிரதமர் குறிப்பிட்டார்.

  குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனையை அளிப்பதில் குற்றத்தடய அறிவியல் நிபுணர்கள் டி.என்.ஏ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீதிமன்றங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எதிர்காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட கடுமையான குற்றங்களை தடுக்க இயலும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

  உலக அளவில் மாறிவரும் போக்குகளை மனதில் கொண்டு அவற்றின் மையங்களாக மாணவர்கள் செயல்படவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நமது உலகை மேலும் சிறந்த இடமாக மாற்றுவதற்கு ஏற்ற முற்போக்கான மாற்றங்களை கொண்டுவர உதவுமாறு மாணவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். இப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறும் மாணைவர்களுக்கு பிரகாசமான துடிப்புள்ள எதிர்காலம் அமைய வாழ்த்துவதாகவும் பிரதமர் கூறினார்.

 

Click here to read PM's speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Pyaaz Khaate Hai, Dimaag Nahi': PM Modi's Jhalmuri Video Breaks The Internet With 100M+ Views

Media Coverage

Pyaaz Khaate Hai, Dimaag Nahi': PM Modi's Jhalmuri Video Breaks The Internet With 100M+ Views
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles the loss of lives in a mishap at a cracker factory in Thrissur, Keralam
April 21, 2026
PM announces ex-gratia from PMNRF

The Prime Minister, Shri Narendra Modi has condoled the loss of lives due to a mishap at a cracker factory in Thrissur, Keralam. Shri Modi also wished speedy recovery for those injured in the mishap.

The Prime Minister announced an ex-gratia from PMNRF of Rs. 2 lakh to the next of kin of each deceased and Rs. 50,000 for those injured.

The Prime Minister posted on X:

“Saddened to hear about the loss of lives due to the mishap at a cracker factory in Thrissur, Keralam. My deepest condolences to those who have lost their loved ones. May the injured recover at the earliest: PM @narendramodi"

"The Prime Minister has announced that an ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000." 

"തൃശൂരിലെ പടക്ക നിർമാണശാലയിലുണ്ടായ അപകടത്തിൽ നിരവധി ജീവനുകൾ പൊലിഞ്ഞ വാർത്തയറിഞ്ഞതിൽ ദുഃഖമുണ്ട്. പ്രിയപ്പെട്ടവരെ നഷ്ടപ്പെട്ടവരുടെ വേദനയിൽ പങ്കുചേരുന്നു. പരിക്കേറ്റവർ എത്രയും വേഗം സുഖം പ്രാപിക്കട്ടെ: പ്രധാനമന്ത്രി

@narendramodi."

"മരിച്ച ഓരോ വ്യക്തിയുടെയും കുടുംബത്തിന് പ്രധാനമന്ത്രിയുടെ ദേശീയ ദുരിതാശ്വാസ നിധിയിൽ (PMNRF) നിന്ന് 2 ലക്ഷം രൂപ ധനസഹായം നൽകുമെന്ന് പ്രധാനമന്ത്രി അറിയിച്ചു. പരിക്കേറ്റവർക്ക് 50,000 രൂപ വീതം നൽകും."