பிரபல நூலாசிரியரும், பொது சிந்தனையாளருமான திரு ஆனந்த் சங்கர் பாண்ட்யா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர் சுட்டுரையில் பிரதமர் கூறியிருப்பதாவது:
‘திரு ஆனந்த் சங்கர் பாண்ட்யா மிகச்சிறந்த நூலாசிரியர் மற்றும் பொது சிந்தனையாளர். அவர் வரலாறு, பொதுக்கொள்கை மற்றும் ஆன்மீகம் குறித்து விரிவாக எழுதியுள்ளார். இந்தியாவின் வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர். விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் அவர் தீவிரமாக ஈடுபட்டதுடன், சமூக சேவைக்காக தன்னலமின்றி பாடுபட்டார். அவரது மறைவால் துயருற்றேன்.
திரு ஆனந்த் சங்கர் பாண்ட்யாவுடனான எனது பல உரையாடல்களை நினைத்துப் பார்க்கிறேன். சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் அவரது கலந்துரையாடல் குறித்த தகவல்கள், பிரச்னைகளை திறமையாக கையாண்டது ஆகியவற்றை கேட்பது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது குடும்பத்தினருடன் பேசி, அவரது மறைவுக்கு இரங்கல்களைத் தெரிவித்தேன். ஓம் சாந்தி.’’
Shri Anand Shankar Pandya Ji was a prolific author and public intellectual who wrote extensively on history, public policy and spirituality. He was passionate about India’s growth. He was active in the VHP and worked selflessly towards social service. Saddened by his demise.
— Narendra Modi (@narendramodi) November 11, 2021


