PM Modi calls for promotion of sports and cultural exchanges between states
A digital movement in the nation is going on and the youth are at the core of this: PM
India has tremendous scope to expand it's tourism sector that can draw the world: PM

சுற்றுலா, கலாச்சாரம், விளையாட்டு மத்திய/மாநில/யூனியன் பிரதேசங்களின் அமைச்சகங்கள் மற்றும் செயலகங்களின் சார்பில் குஜராத் மாநிலம், கட்ச் நகரில் கூட்டாக நடந்த தேசிய மாநாட்டின் துவக்கவிழாவில் காணொளி காட்சி மூலமாக பிரதமர் துவக்க உரையாற்றினார்.

விளையாட்டுத் துறையில் சிறந்துவிளங்க அமைப்புரீதியான நடவடிக்கைகள் தேவை என்பதை பிரதமர் வலியுறுத்தினார். மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசும் விளையாட்டுகளை பிரபலப்படுத்த ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டார். நமது திறன்களை அறிந்து அதற்கேற்ற உட்கட்டமைப்புகளை செய்ய மாவட்ட அளவிலேயே சரியான அளவீடுகள் தேவை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்திய சுற்றுலாத்துறையை பொறுத்தவரை விரிவுபடுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும், அதன்மூலம் உலகத்தையே நம்மை நோக்கி ஈர்க்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்திய இளைஞர்கள் டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா போன்ற திட்டங்களுக்கு மிகுந்த பலம் தரும் முறையில் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார். ஒவ்வொரு மாநிலமும் சில இலக்குகளை தேர்ந்தெடுத்து உலகத்தரத்திலான உட்கட்டமைப்பை செய்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

ஒன்றுபட்ட இந்தியா, ஒப்பற்ற இந்தியா முன்னெடுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றும் நோக்கில் செயல்படுமாறு மாநாட்டிற்கு வந்திருந்தவர்களை பிரதமர் வேண்டிக்கொண்டார். குஜராத் முதல்வர் திரு.விஜய் ரூபானி, மத்திய அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு) திரு.விஜய் கோயல் மற்றும் டாக்டர். மகேஷ் சர்மா ஆகியோர் உடன் இருந்தனர்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'Wed in India’ Initiative Fuels The Rise Of NRI And Expat Destination Weddings In India

Media Coverage

'Wed in India’ Initiative Fuels The Rise Of NRI And Expat Destination Weddings In India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 15, 2025
December 15, 2025

Visionary Leadership: PM Modi's Era of Railways, AI, and Cultural Renaissance