பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் குண்டு எறிதல் எஃப்57 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் ஹொகடோ ஹோடோஷே சேமாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஆடவர் குண்டு எறிதல் எஃப் 57 பிரிவில் ஹொகடோ ஹோடோஷே சேமா வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது நம் தேசத்திற்கு ஒரு பெருமையான தருணம்! அவரது வலிமையும் உறுதியும் அபாரமானவை. அவருக்கு பாராட்டுகள். இனி வரும் அவரது முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துகள்."
#Cheer4Bharat"
A proud moment for our nation as Hokato Hotozhe Sema brings home the Bronze medal in Men’s Shotput F57! His incredible strength and determination are exceptional. Congratulations to him. Best wishes for the endeavours ahead. #Cheer4Bharat pic.twitter.com/dBZONv44kM
— Narendra Modi (@narendramodi) September 7, 2024