இந்தச் சிலைக்கான பணி நிறைவுபெறும்வரை நேதாஜியின் முப்பரிமாண மெய்நிகர் சிலை ஒன்று அதே இடத்தில் அமைக்கப்படும்
பராக்கிரம தினத்தன்று நேதாஜியின் முப்பரிமாண மெய்நிகர் சிலையை இந்தியா நுழைவாயிலில் பிரதமர் திறந்து வைப்பார்
2019 முதல் 2022 வரையிலான காலத்திற்கு சுபாஷ் சந்திர போஸ் பேரிடர் மேலாண்மை விருதுகளையும் பிரதமர் வழங்குவார்

மாபெரும் விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை நினைவுபடுத்தும் வகையிலும் ஓராண்டு கால கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரம்மாண்ட சிலை ஒன்றை இந்தியா நுழைவாயிலில் நிறுவ அரசு முடிவு செய்துள்ளது. பளிங்குக் கல்லால் உருவாக்கப்படவிருக்கும் இந்தச் சிலை நமது விடுதலைப் போராட்டத்தில் நேதாஜியின் தீவிரமான பங்களிப்புக்குப் பொருத்தமான அஞ்சலியாக இருப்பதோடு அவருக்கு நாடு கடன் பட்டிருப்பதன் அடையாளமாகவும் இருக்கும். இந்தச் சிலைக்கான பணி நிறைவுபெறும்வரை நேதாஜியின் முப்பரிமாண மெய்நிகர் சிலை ஒன்று அதே இடத்தில் அமைக்கப்படும்.

நேதாஜியின் முப்பரிமாண மெய்நிகர் சிலையை இந்திய நுழைவுவாயிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2022, ஜனவரி 23 அன்று மாலை 6 மணிக்குத் திறந்துவைப்பார். இந்தச் சிலையின் உயரம் 28 அடி, அகலம் 6அடி.

 

இந்தச் சிலை நிறுவும் விழாவின் போது, 2019, 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளுக்கான சுபாஷ் சந்திர போஸ் பேரிடர் மேலாண்மை விருதுகளையும் பிரதமர் வழங்குவார். இந்த விழாவில் மொத்தம் ஏழு விருதுகள் வழங்கப்படும். சுபாஷ் சந்திர போஸ் பேரிடர் மேலாண்மை விருதுபெறும் அமைப்புக்கு ரூ. 51 லட்சம் ரொக்கப் பரிசும் ஒரு சான்றிதழும் தனிநபருக்கு ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசும் ஒரு சான்றிதழும் வழங்கப்படும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
EU Firms Generate 186 Billion Euros In India, Support 6 Million Jobs: Report

Media Coverage

EU Firms Generate 186 Billion Euros In India, Support 6 Million Jobs: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 8, 2026
May 08, 2026

Nari Shakti to National Security: One Vision, a Thousand Victories Under PM Modi