இந்தியா-இ.எஃப்.டி.ஏ வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றிய தமது செய்தியையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் வெளியிட்ட பதிவுக்கு பிரதமர் அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
"இந்தியா-இ.எஃப்.டி.ஏ வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம், பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கும் நமது இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதற்குமான நம் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இ.எஃப்.டி.ஏ நாடுகளுடனான நமது பிணைப்புகளை வலுப்படுத்துவதால், வரவிருக்கும் காலம் அதிக செழுமையையும் பரஸ்பர வளர்ச்சியையும் அளிக்கும்.”
Delighted by the signing of the India-EFTA Trade & Economic Partnership Agreement. This landmark pact underlines our commitment to boosting economic progress and create opportunities for our youth. The times ahead will bring more prosperity and mutual growth as we strengthen our… https://t.co/z40wurQn9M pic.twitter.com/i9vQM9jYAi
— Narendra Modi (@narendramodi) March 10, 2024


