Prime Minister interacts with contingent that represented India in the Paris Olympics

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். புதுதில்லியில் அவர்களைச் சந்தித்த திரு மோடி, விளையாட்டு அனுபவங்களைக் கேட்டறிந்ததுடன், விளையாட்டுத் துறையில் அவர்களின் சாதனைகளைப் பாராட்டினார்.

பாரிஸ் சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன் என்று திரு மோடி கூறினார். இந்திய அரசு தொடர்ந்து விளையாட்டுக்கு ஆதரவளிக்கும், உயர்தர விளையாட்டு உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும் என்று  அவர் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக எக்ஸ் பதிவுகளில், பிரதமர் கூறியதாவது; 

"பாரிஸ் ஒலிம்பிக்கில் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய குழுவினருடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டுகளில் இருந்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தேன், விளையாட்டுத் துறையில் அவர்களின் சாதனைகளைப் பாராட்டினேன்.

பாரிஸுக்குச் சென்ற ஒவ்வொரு வீரரும் ஒரு சாம்பியன். இந்திய அரசு தொடர்ந்து விளையாட்டுக்கு ஆதரவளிக்கும். உயர்தர விளையாட்டு உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும்’’..

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
During Diplomatic Dinners to Hectic Political Events — Narendra Modi’s Austere Navratri Fasting

Media Coverage

During Diplomatic Dinners to Hectic Political Events — Narendra Modi’s Austere Navratri Fasting
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை அக்டோபர் 6, 2024
October 06, 2024

PM Modi’s Inclusive Vision for Growth and Prosperity Powering India’s Success Story