சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்திற்கு முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இன்று, நான் சைப்ரஸ் குடியரசு, கனடா, குரோஷியா ஆகிய நாடுகளுக்குப் பயணத்தைத் தொடங்குகிறேன்.
சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் அழைப்பின் பேரில் ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் சைப்ரஸ் நாட்டிற்குச் செல்கிறேன். சைப்ரஸ், மத்தியதரைக் கடல் பகுதியிலும் ஐரோப்பிய யூனியனிலும் இந்தியாவுக்கு நெருங்கிய, முக்கியமான நட்பு நாடாகும். இந்தப் பயணம் வரலாற்றுப் பிணைப்புகளை வலுவாக்கவும், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நமது உறவுகளை விரிவுபடுத்தவும், மக்களிடையேயான பரிமாற்றங்களை ஊக்குவிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கும்.
பின்னர் சைப்ரஸிலிருந்து, கனடாவிற்குச் செல்கிறேன். கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் அழைப்பின் பேரில் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கனடாவின் கனனாஸ்கிஸுக்குச் செல்லவுள்ளேன். உலகளாவிய பிரச்சினைகள், உலகளாவிய தென் பகுதி நாடுகளின் முன்னுரிமைகள் ஆகியவை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இந்த உச்சி மாநாடு இடமளிக்கும். இந்த மாநாட்டுக்கு இடையே நட்பு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுகளில் ஈடுபடவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பின்னர் ஜூன் 18 அன்று, குரோஷியா-வுக்குச் செல்கிறேன். குரோஷியா அதிபர் திரு ஜோரன் மிலானோவிக், பிரதமர் திரு ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக் ஆகியோருடனான சந்திப்புகளை எதிர்நோக்கியுள்ளேன். இரு நாடுகளும் பல நூற்றாண்டுகள் பழமையான நெருங்கிய கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ளன. குரோஷியாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைந்துள்ளது. இந்தப் பயணம், பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான புதிய வழிகளைத் திறக்கும்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் இந்தியாவுக்கு உறுதியான ஆதரவை வழங்கியதற்காக இந்த நட்பு நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கவும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் எதிர்ப்பதில் உலகளாவிய புரிதலை ஊக்குவிக்கவும் இந்த மூன்று நாடுகளின் சுற்றுப்பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்."
Over the next few days, will be visiting Cyprus, Canada and Croatia to attend various programmes, including bilateral meetings and multilateral engagements.https://t.co/CLhd5fMHH4
— Narendra Modi (@narendramodi) June 15, 2025
In Cyprus, will be meeting President Nikos Christodoulides and other dignitaries. Cyprus is a valued partner in the Mediterranean and the EU. This visit will add momentum in key areas like trade and cultural linkages. @Christodulides
— Narendra Modi (@narendramodi) June 15, 2025
I will be attending the G7 Summit in Canada, which will give a great platform to exchange perspectives on various global issues and elaborate on the priorities of the Global South.@MarkJCarney
— Narendra Modi (@narendramodi) June 15, 2025
My visit to Croatia, which will be the first ever by an Indian Prime Minister, presents a historical opportunity to boost linkages with a valued partner country.@AndrejPlenkovic
— Narendra Modi (@narendramodi) June 15, 2025


