பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ரூ.2,781 கோடி மதிப்பிலான ரயில்வே அமைச்சகத்தின் இரண்டு திட்டங்களுக்கு இன்று ஒப்புதல் அளித்தது.
தேவ்பூமி துவாரகா (ஓகா) – கனாலஸ் இரட்டைவழிப்பாதை – 141 கிமீ
பத்லபூர் – கர்ஜாத் 3-வது மற்றும் 4-வது வழித்தடம் – 32 கிமீ
இதன் மூலம் அப்பகுதியில் போக்குவரத்து சேவை மேம்பட்டு அப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பும், சுயவேலைவாய்ப்புகளும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் 4 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த இரண்டு திட்டங்கள் இந்திய ரயில்வேயின் வழித்தடக் கட்டமைப்பை சுமார் 224 கிமீ தொலைவிற்கு அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள 585 கிராமங்களில் வசிக்கும் சுமார் 32 லட்சம் பேர் பயனடைவார்கள்.
கனாலஸ் முதல் ஓகா வரையிலான இரட்டைவழிப்பாதை மூலம் துவாரகாதிஷ் கோவிலுக்கு யாத்ரீகர்கள் எளிதில் செல்ல வழிவகுப்பதுடன் சௌராஷ்டிரா பிராந்தியத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
பத்லபூர் – கர்ஜாத் பிரிவு மும்பை புறநகர் வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். அங்கு 3-வது மற்றும் 4-வது வழித்தடம் மும்பை புறநகர் பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்துவதுடன் பயணிகளின் எதிர்காலத் தேவைகளையும் நிறைவேற்றும். அத்துடன் தென்னிந்தியாவிற்கு இணைப்பை ஏற்படுத்தும்.
Today's Cabinet decision on two multitracking projects covering 4 districts across Maharashtra and Gujarat will add to our rail infrastructure. Mobility, operational efficiency and service reliability will be enhanced. Multi-modal connectivity and logistic efficiency will also…
— Narendra Modi (@narendramodi) November 26, 2025


