சைந்தியா - பாகூர் (4வது பாதை), சந்த்ராகாச்சி - கரக்பூர் (4வது பாதை) ஆகிய 2 ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டங்களுக்கான மொத்த செலவு சுமார் 4,474 கோடி ரூபாயாகும். இந்தத் திட்டங்கள், பிரதமர் திரு நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளன. இது பிராந்திய மக்கள் தன்னிறைவு அடையவும், அவர்களின் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தவும் ஆதரவளிக்கும்.
ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் பங்குதாரர் ஆலோசனைகள் மூலம் பன்முக இணைப்பு மற்றும் தளவாட செயல்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பிரதமரின் கதிசக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ் இவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்கு தடையற்ற இணைப்பை வழங்கும்.
மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள 5 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டங்கள், இந்திய ரயில்வேயின் தற்போதைய வலையமைப்பை சுமார் 192 கி.மீ. அதிகரிக்கும். சுமார் 147 லட்சம் மக்கள்தொகை கொண்ட சுமார் 5,652 கிராமங்களுக்கான இணைப்பையும் மேம்படுத்தும்.
देशभर में रेल नेटवर्क के विकास और विस्तार के लिए हम पूरी प्रतिबद्धता के साथ जुटे हैं। इसी दिशा में एक अहम कदम उठाते हुए हमारी सरकार ने गोंदिया-जबलपुर, पुनारख-किऊल और गम्हरिया-चांडिल के बीच तीन मल्टीट्रैकिंग प्रोजेक्ट्स को मंजूरी दी है। ‘पीएम गतिशक्ति’ के तहत इन परियोजनाओं से…
— Narendra Modi (@narendramodi) February 24, 2026


