தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான யூரியா-2026 தேசிய முதலீட்டுக் கொள்கை குறித்த உரத் துறையின் முன்மொழிவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தக் கொள்கை, நாட்டில் எரிவாயு அடிப்படையில் (யூரியா) உர உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கான புதிய முதலீடுகளை ஊக்குவிக்க வகை செய்கிறது. இது தற்சார்பு நிலையை அடைவதற்கான இலக்கை எட்ட உதவிடும். மேலும், புதிய முதலீட்டுக் கொள்கை-2012 உடன் ஒப்பிடுகையில், இதில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், நிலையான, மாறுபடும் செலவுகள் என்ற வகைப்பாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. 12% குறைந்தபட்ச, 16% அதிகபட்ச உச்ச வரம்புடன் கூடிய பங்கு மூலதனத்தின் மீதான வருவாய் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அப்போதைய அந்நியச் செலாவணி விகிதங்களின் அடிப்படையில், நிலையான செலவை, இந்திய ரூபாயாக மாற்றுவதன் மூலம், அந்நியச் செலாவணியால் ஏற்படும் இழப்பு குறைக்கப்பட்டுள்ளது. யூரியா-2026 தேசிய முதலீட்டுக் கொள்கையின் கீழ் நிறுவப்படும் ஒவ்வொரு உற்பத்தி ஆலைக்கும் ரூ.250 கோடிக்கும் அதிகமான சேமிப்பு கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
'தற்சார்பு இந்தியா' திட்டத்திற்கான யூரியா-2026 தேசிய முதலீட்டுக் கொள்கையின் கீழ் அமைக்கப்படும்.
देशभर के अपने किसान भाई-बहनों के कल्याण के लिए हमारी सरकार कोई कोर-कसर नहीं छोड़ रही है। इसी कड़ी में आज राष्ट्रीय यूरिया निवेश नीति-2026 के प्रस्ताव को मंजूरी दी गई है। इससे न सिर्फ गैस आधारित नए यूरिया उत्पादन संयंत्रों की स्थापना के लिए निवेश को प्रोत्साहन मिलेगा, बल्कि यूरिया…
— Narendra Modi (@narendramodi) July 15, 2026


