இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் ஏற்பட்ட விபத்தால் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள், விரைவில் குணமடைய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000-மும் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் ஏற்பட்ட விபத்தால் நேரிட்ட உயிரிழப்புகளை குறித்து அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். இந்தக் கடினமான தருணத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 அளிக்கப்படும்: பிரதமர் @narendramodi”
Saddened by the loss of lives due to a mishap in Bilaspur, Himachal Pradesh. My thoughts are with the affected people and their families during this difficult time. Praying for the speedy recovery of the injured.
— PMO India (@PMOIndia) October 7, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next…


