பிரதமர் திரு.நரேந்திர மோடி, உகாதி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
திரு.மோடி சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “அனைவருக்கும் உகாதி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திருநாள் நம்பிக்கையையும், புதிய தொடக்கத்தையும் குறிக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அளவற்ற மகிழ்ச்சியையும், வளத்தையும் உகாதி திருநாள் கொண்டு வரட்டும்” என்று கூறியுள்ளார்.
Wishing everyone on the special occasion of Ugadi. pic.twitter.com/ePkdzxr3FX
— Narendra Modi (@narendramodi) April 13, 2021


