நெதர்லாந்து பிரதமர் மேன்மை தங்கிய திரு மார்க் ரூட்டே-யுடன்  பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில்  உரையாடினார்.

தண்ணீர் குறித்த உத்தி வகுத்தலில் பங்களிப்பு, வேளாண்மையின் முக்கிய பிரிவுகளில்  ஒத்துழைப்பு, உயர்தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான ஆர்வம் உட்பட இந்தியா – நெதர்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உறவுகள், இந்தியா பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்களில் இருதலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

தொடர்ச்சியான உயர்நிலை பயணங்கள் மற்றும் கலந்துரையாடல்களுடன் இந்தியா – நெதர்லாந்து உறவுகள் அண்மை ஆண்டுகளில் பிரமாண்டமான வளர்ச்சியை பெற்றுள்ளன. 2021 ஏப்ரல் 9 அன்று இரு பிரதமர்களும், இணையவழி உச்சிமாநாட்டில் பங்கேற்றனர். பின்னர், தொடர்ச்சியாக பேசி வருகின்றனர்.  இந்த இணையவழி உச்சிமாநாட்டின் போது நெதர்லாந்துடன் தண்ணீர் குறித்த உத்தி வகுத்தல் பங்களிப்பு தொடங்கப்பட்டது.

இந்த ஆண்டில் இந்தியாவும் நெதர்லாந்தும் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டதன் 75-வது ஆண்டினை கூட்டாக நினைவுகூர்கின்றன. இந்த சிறப்பான அம்சம் 2022 ஏப்ரல் 4 முதல் 7 வரை நெதர்லாந்துக்கு குடியரசுத் தலைவரின் அரசுமுறைப் பயணத்தின் மூலம் கொண்டாடப்பட்டது.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Short trip, big results: 7 crucial deals inked by PM Modi in UAE

Media Coverage

Short trip, big results: 7 crucial deals inked by PM Modi in UAE
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 15, 2026
May 15, 2026

Viksit Bharat Unleashed: PM Modi's Blueprint Delivers Energy Independence, Tech Boom, and Diplomatic Dominance