Secretary Rubio briefs PM on the sustained progress in bilateral cooperation.
Secretary Rubio shares US perspective on various regional and global issues.
PM reaffirms India’s consistent support for peace efforts and reiterates the call for peaceful resolution of the conflicts.
PM conveys warm greetings to President Trump.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர்  திரு மார்கோ ரூபியோ,  பிரதமர் திரு. நரேந்திர மோடியை புது தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.

பாதுகாப்பு, உத்திசார் தொழில்நுட்பங்கள், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி பாதுகாப்பு, போக்குவரத்து இணைப்பு, கல்வி, மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள தொடர் முன்னேற்றம் குறித்து அமைச்சர் திரு ரூபியோ பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழல் உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்த அமெரிக்காவின் கண்ணோட்டத்தை அமைச்சர் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டார்.

அப்போது, அமைதி முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் பிரதமர் மீண்டும் உறுதிப்படத் தெரிவித்தார். பேச்சுவார்த்தைகள், தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மூலம் மோதல்களுக்கு, அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

அமெரிக்க அதிபர் திரு டொனால்டு டிரம்புக்கு, தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் திரு ரூபியோவிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார். மேலும், இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான தொடர் பேச்சுவார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரித்துள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Railways to operate over 300 special trains for Jagannath Rath Yatra, 100 for Onam: Ashwini Vaishnaw

Media Coverage

Railways to operate over 300 special trains for Jagannath Rath Yatra, 100 for Onam: Ashwini Vaishnaw
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 7, 2026
July 07, 2026

PM Modi Elevating India’s Global Standing Through Diplomacy and Development