"Devotion to Lord Ram has been expressed via artistic expression on these stamps"
"Teachings related to Lord Ram, Maa Sita and Ramayana goes beyond the boundaries of time, society and caste and are connected to each and every individual out there"
"Many nations in the world, including Australia, Cambodia, America, New Zealand, have issued postal stamps with great interest on the life events of Lord Ram"
"The story of Ramayana will prevail among the people as long as there are mountains and rivers on earth"

வணக்கம்! ராம-ராம.

ஸ்ரீ ராமர் கோவில் பிரதிஷ்டை தொடர்பான மற்றொரு அற்புதமான நிகழ்ச்சியில் இணைந்திருக்கும் பாக்கியம் இன்று, எனக்கு கிடைத்துள்ளது. இன்று, ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 6 சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. பகவான் ஸ்ரீ ராமர் தொடர்பான தபால் தலைகள் உலகின் பல்வேறு நாடுகளில் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளன, இன்று அவரது தபால் தலைத் தொகுப்பும்  வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள ராமரின் பக்தர்கள் அனைவருக்கும், நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

சக மாணவர்களே,

 

தபால் தலை ஒரு வகைப் பயன்பாடு தான், இது நாம் அனைவரும் அறிந்ததே... அவற்றை உறைகளில் வைப்பது, உங்கள் கடிதங்கள் மற்றும் செய்திகளை அல்லது தேவையான ஆவணங்களை அவைகளின் உதவியுடன் அனுப்புவது. ஆனால் தபால் தலைகள் வேறொரு முக்கிய பங்கையும் வகிக்கின்றன. இன்றியமையா கருத்துக்கள், வரலாறு மற்றும் வரலாற்று நிகழ்வுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் ஊடகமாகவும் அஞ்சல் தலைகள் உள்ளன. நீங்கள் ஒரு தபால் தலையை வெளியிடும்போது, யாராவது அதை ஒருவருக்கு அனுப்பும்போது, அவர்கள் கடிதங்கள் அல்லது பொருட்களை மட்டும் அனுப்புவதில்லை. அவர் இயல்பாகவே வரலாற்றின் ஒரு பகுதியை இன்னொருவருக்கு பரப்புகிறார். இந்த ஸ்டாம்ப் வெறும் காகிதம் அல்ல, ஒரு கலைப்படைப்பு மட்டுமல்ல. அவை வரலாற்று புத்தகங்கள், கலைப்பொருள் வடிவங்கள் மற்றும் வரலாற்று தளங்களின் மிகச்சிறிய வடிவமாகவும் உள்ளன. ஒரு வகையில், பெரிய புத்தகங்கள் மற்றும் பெரிய சிந்தனையின் குறு  வடிவமாக இது உள்ளது என்றும் நாம் கூறலாம். இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த நினைவு தபால் தலைகளிலிருந்து நமது இளைய தலைமுறையினரும் நிறையத் தெரிந்து கொள்ள முடியும், கற்றுக்கொள்ள முடியும். 

 

இந்த தபால் தலைகளில் ராமர் கோயிலின் பிரம்மாண்டமான படமும், கலை வெளிப்பாடு மூலம் ராமர் பக்தியின் உணர்வும், 'மங்கள் பவன் அமங்கல் ஹரி' என்ற பிரபலமான சொற்றொடர் மூலம் தேசத்தின் நன்மைக்கான வாழ்த்துக்களும் இருப்பதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றில் சூரியனின் உருவம், சூர்யவன்ஷி ராமின் சின்னம், அத்துடன் இது நாட்டில் புதிய ஒளியின் செய்தியையும் அளிக்கிறது. அவற்றில் சரயு நதியின் சித்திரம் உள்ளது, இது நாடு எப்போதும் ராமரின் ஆசீர்வாதத்துடன் நகர்கிறது என்பதைக் குறிக்கிறது. கோயிலின் உட்புறத்தின் அழகு இந்தத் தபால் தலைகளில் மிக விரிவாக அச்சிடப்பட்டுள்ளது.   ஒரு வகையில் ராமபிரான் மூலமாக ஐந்து கூறுகள் குறித்த நமது தத்துவம் பிரதிபலிக்கப்பட்டுள்ளது என்று என்னிடம் கூறப்பட்டது. இந்தப் பணியில், தபால் துறை ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையுடன் துறவிகளிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்றுள்ளது. இந்த பங்களிப்புக்காக அந்த மகான்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்

 

சக மாணவர்களே,

 

பகவான் ஸ்ரீ ராமர், அன்னை சீதா மற்றும் ராமாயணம் ஆகியோரின் வார்த்தைகள் காலம், சமூகம், சாதி, மதம் மற்றும் பிராந்தியத்திற்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு நபருடனும் பின்னிப் பிணைந்துள்ளன. மிகவும் கடினமான காலங்களில் கூட தியாகம், ஒற்றுமை மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தும் ராமாயணம், பல கஷ்டங்களிலும் அன்பின் வெற்றியைக் கற்பிக்கும் ராமாயணம், முழு மனிதகுலத்தையும் தன்னுடன் இணைக்கிறது. ராமாயணம் உலகம் முழுவதும் ஈர்ப்பு மையமாக இருப்பதற்கு இதுவே காரணம். உலகின் பல்வேறு நாடுகளில், பல்வேறு கலாச்சாரங்களில், ராமாயணம் குறித்து ஒரு உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இந்த உணர்வுகளின் பிரதிபலிப்பாக, உலகம் முழுவதும் ராமர், அன்னை சீதா மற்றும் ராம கதை எவ்வாறு பெருமிதத்துடன் கருதப்படுகிறது என்பதன் பிரதிபலிப்பாகவும் இன்று வெளியிடப்படும் புத்தகங்கள் உள்ளன. ராமரை  அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நாடுகள் எவ்வாறு தபால் தலைகளை வெளியிட்டு வருகின்றன என்பதைப் பார்ப்பது இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கம்போடியா, கனடா, செக் குடியரசு, பிஜி, இந்தோனேசியா, இலங்கை, நியூசிலாந்து, தாய்லாந்து, கயானா, சிங்கப்பூர்... இதுபோன்ற பல நாடுகள் ராமபிரானின் வாழ்க்கை அத்தியாயங்கள் குறித்து மிகுந்த மரியாதையுடனும் பிணைப்புடனும் தபால் தலைகளை வெளியிட்டுள்ளன. இந்தியாவுக்கு வெளியே ராமர் எவ்வாறு ஒரு சிறந்த ஆதர்சமாக இருக்கிறார், உலகின் அனைத்து நாகரிகங்களிலும் ராமரின் தாக்கம் எவ்வளவு ஆழமாக உள்ளது, ராமாயணம் எவ்வளவு ஆழமானது, நவீன காலத்திலும் கூட அவரது பாத்திரத்தை நாடுகள் எவ்வாறு பாராட்டியுள்ளன, இந்த ஆல்பம் ஸ்ரீ ராமர் மற்றும் மாதா ஜானகியின் திருவிளையாடல்  கதைகளின் சுருக்கமான சுற்றுப்பயணத்தையும் வழங்கும். ஒரு வகையில் வால்மீகி மகரிஷியின் அழைப்பு இன்றும் அழியாமல் இருக்கிறது, அதில் அவர் கூறியிருப்பதாவது:-

 

யவாத் ஸ்தாஸ்யந்தி கிர்ய:

சரிட்ஷ் மஹித்தலே.

தவத் ராமாயண கதா,

லோகேஷு ப்ரஸரிஷ்யதி॥

அதாவது, பூமியில் மலைகளும், நதிகளும் இருக்கும் வரை, ராமாயணக் கதை, ஸ்ரீராமரின் ஆளுமை மக்கள் குழுவில் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த சிறப்பு நினைவு அஞ்சல் தலைகளுக்காக உங்கள் அனைவருக்கும், நாட்டுமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பல நல்வாழ்த்துக்கள்.

நன்றி! ராம-ராம.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Apple exports record $2 billion worth of iPhones from India in November

Media Coverage

Apple exports record $2 billion worth of iPhones from India in November
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 17, 2025
December 17, 2025

From Rural Livelihoods to International Laurels: India's Rise Under PM Modi